இன்றைய ராசி பலன்(08-03-2025)
Report this article
மேஷம்:
இன்று உங்கள் மனதில் சில சஞ்சலம் உண்டாகலாம்.தியானம் செய்வதால் உங்கள் மன நிலையில் மாற்றம் பெறுவீர்கள்.மனைவி வழி உறவுகளில் சங்கடம் ஏற்படலாம்.
ரிஷபம்:
உங்கள் வியாபாரத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம்.அறிமுகம் ஆகாதவர்களிடம் உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பகிர வேண்டாம்.
மிதுனம்:
அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புள்ளது.ஆடம்பர செலவுகள் செய்யாமல் பார்த்து கொள்வது நல்லது.கவனச் சிதறலுக்கு இடம் அளிக்காதீர்கள்.
கடகம்:
வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
சிம்மம்:
இன்று புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு நன்மை தரும்.வேலைக்காக வெளியூர் செல்ல நேரலாம்.உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி:
பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிக்கலான பணிகளையும் கவனமாகவும் எளிதாகவும் கையாள்வீர்கள்.
துலாம்:
மனதில் உங்களுக்கு அமைதி உண்டாகும்.வேலையில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புள்ளது.தேவை இல்ல்லாமல் எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
விருச்சிகம்:
உங்கள் வேலையை திட்டமிட்டது போல் செய்வீர்கள்.சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மை தரும்.
தனுசு:
உடல் சோர்வு உண்டாகும்.மதியம் மேல் வேலை பளு அதிகரிக்கலாம்.சொந்தங்கள் வழியாக சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.இறைவழிபாடு சிறந்த பலன் அளிக்கும்.
மகரம்:
உங்கள் பணிகள் பாராட்டைப் பெறும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே நல்ல அன்பு மலரும்.
கும்பம்:
இனிமையான பேச்சு மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.அவரை விரும்ப ஆரம்பிப்பீர்கள். இது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
மீனம்:
சிலருக்கு வேலை நிமித்தமாக தொலை தூர பயணம் செல்ல நேரிடலாம்.சொத்து பிரச்சனை முடிவு பெரும்.சகோதிரி வழியில் ஆதரவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |