திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வர
சிலருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் இருக்கும், எத்தனையோ வரன்கள் பார்த்தும் அமையாமல் காலம் கடந்து கொண்டே செல்லலாம்.
இதனால் குடும்பத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும், பெற்றோர்களும் பிள்ளைகளை நினைத்து கவலை கொள்வார்கள்.
தோஷம் இருக்குமோ? பரிகாரம் செய்யலாமா? எந்த கோவிலுக்கு செல்வது? என பல குழப்பங்களுக்கு மனதை ஆட்கொள்ளும்.
ஆனால் அவ்வாறு உடலை வருத்திக்கொள்வதற்கு பதிலாக தட்சணாமூர்த்தியை வணங்கி துதி பாராயணம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
இதனை ஒவ்வொரு வியாழன் அன்றும் விரதம் இருந்து பயபக்தியுடன் முழு மனதாக செய்து வர வேண்டும்.
நவகிரகங்களில் பூர்ண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களும் குருவான இவரை பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் என்றும் அழைப்பர்.
வியாழக்கிழமைகளில் பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக்கடலை மாலை அனுவித்தும் வழிபடலாம்.
அதே நேரத்தில் ஞானமர்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய
செம்மலையலது உளம் சிந்தியாதரோ.
இதை பாராயணம் செய்ய சீக்கிரத்தில் நல்ல வரன் தேடி வரும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இதனை செய்து வர நல்ல அறிவுள்ள குழந்தை பிறக்கும்.
குறிப்பாக மனகுழப்பங்கள் ஏற்படும் போது தட்சணாமூர்த்தி முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட மன குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையும்.