பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் வசிய மை: எப்படி தயாரிப்பது?
சில பேர் வாழ்க்கையில் என்ன தான் முயற்சிகளை செய்தாலும் அதிர்ஷ்டமும் இருக்காது, பணவரவும் இருக்காது.
அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் பரிகாரத்தை செய்து, அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு உண்டான வழியை தேட வேண்டும்.
வீட்டில் பணவரவு அதிகரிக்க மருதாணி பண வசிய மை தயார் செய்யும் முறையை கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் மருதாணி இலையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வசம்புத்தூள், சுத்தமான நெய்.
வசம்பு தூளை ஒரு கடாயில் போட்டு கருப்பு நிறமாக மாறும் வரை நன்றாக வறுத்தாலே கருப்பு நிறமாக மாறிவிடும்.
அடுத்து மருதாணி இலைகளை பறித்து நன்றாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பிழிந்தால் அதிலிருந்து சாறு கிடைக்கும்.
கருப்பு நிறத்தில் இருக்கும் வசம்பு பொடியோடு, இந்த மருதாணி இலை சாறை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை ஒரு தட்டில் போட்டு நன்றாக நிழலிலேயே உலர வைத்து அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அந்த பொடியோடு கொஞ்சமாக பசு நெய் சேர்த்து கலந்தால் கருப்பு நிற மை கிடைத்துவிடும். இதுதான் வசிய திலகம்.
இந்த மையை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை சொல்லி, இதற்கு சக்தியூட்டி கொள்ளுங்கள்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் பணவரவும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |