Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா?

By Fathima Apr 07, 2024 06:05 AM GMT
Report

லட்சங்களில் செலவு செய்து சொந்தமாக வீடு கட்டி குடியேறினாலும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றுவது கட்டாயம்.

இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியை என்றென்றும் நிலவச்செய்யும்.

இந்த பதிவில் வீட்டில் மருதாணி செடி வளர்ப்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

மருதாணி செடியை வீட்டில் வைத்திருப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கிறது.

Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா? | Maruthani Plant Vastu Tips In Tamil

இதன் வாசம் கெட்ட சக்திகளை அண்டவிடாது, பூச்சிகளையும் நெருங்க விடாது. வீட்டின் முன்பக்கத்தில் மருதாணி செடியை வளர்ப்பதால் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சனையும் வராது என்பது நம்பிக்கை.

வீட்டின் எந்தவொரு திசையிலும் இதனை வளர்க்கலாம், தோஷம் இல்லாத மருதாணி செடி மகத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூட சிறிய தொட்டிகளில் மருதாணி செடியை வளர்த்து வரலாம்.

தாய் சொல்லை தட்டாத சனிபகவான்

தாய் சொல்லை தட்டாத சனிபகவான்


கெட்ட சக்திகளை விரட்ட

மருதாணியின் விதைகளை நன்றாக காயவைத்து சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள், வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று சில விதைகளை எடுத்து சாம்பிராணி தூபம் போட்டால் கெட்ட சக்திகள் நீங்கி விடும், தாந்திரீக வித்தைகளில் மருதாணி விதைகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா? | Maruthani Plant Vastu Tips In Tamil

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க

மருதாணி செடியின் இலைகளை வேப்பிலையுடன் சேர்த்து உங்களது வாகனங்களில் வைத்து விடுங்கள், இப்படி செய்வதால் எந்தவொரு திருஷ்டியும் தோஷமும் உங்களை நெருங்காது.

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை


தொழில் விருத்திக்கு

தொழில் செய்யும் இடங்களிலும் மருதாணி இலைகளை வைத்திருப்பது லாபத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது, ஏனெனில் இது எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதால் லாபம் பெருகும், கண் திருஷ்டியை நீக்கிவிடும், குடும்பத்திலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.  

Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா? | Maruthani Plant Vastu Tips In Tamil

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US