இன்றைய ராசி பலன்(28.02.2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் காத்திருக்கிறது.நண்பர்கள் உதவியால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.ஒரு சிலருக்கு மதியம் மேல் உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம்.
ரிஷபம்:
குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும்.பெரியவர்கள் ஆதரவால் சிலருக்கு வேலையில் வெற்றி கிடைக்கும்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
மிதுனம்:
இன்று அலுவலகத்தில் கவனமாக செல்ல வேண்டும்.மூன்றாம் நபரால் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும்.கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும்.அமைதி காப்பதால் வெற்றி பெறலாம்.
கடகம்:
உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.
சிம்மம்:
நீங்கள் செய்யும் வேலைகள் கவனம் அவசியம்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகும்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் சந்திக்கலாம் ஆதலால் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும்.
கன்னி:
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.மறைமுகமாக தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
துலாம்:
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.வேலையில் சில சங்கடம் உருவாகும்.பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் தோன்றும்.இறைவழிபாடு நன்மை அளிக்கும்.
விருச்சிகம்:
உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.தொழிலில் இருந்த தடை விலகும்.நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்.
தனுசு:
முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பின் விளைவுகளை நினைத்துப் பார்த்து செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.
மகரம்:
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
கும்பம்:
உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த வருவாய் வரும்.
மீனம்:
இன்று தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும்.எதையும் யோசித்து செய்வதால் வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.பயணங்களில் கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |