உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா?

By Sakthi Raj Feb 27, 2026 01:00 PM GMT
Report

கனவு என்பது நிச்சயம் நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் சமயங்களில் நாம் நினைக்காத, யோசிக்காத விஷயங்கள் கூட கனவில் வருவதை பார்க்க முடிகிறது. அப்படியாக ஒருவருடைய கனவில் யானை வருகிறது என்றால் அதற்கு பின்னால் என்ன பலன் என்று பார்ப்போம்.

கனவில் யானை வருவது ஒருவருக்கு செல்வம், மங்களம், அதிகாரம் மற்றும் வெற்றியை கொடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. அதாவது இந்த கனவு நமக்கு அரசாங்கத்தால் உதவி மற்றும் வழக்குகளில் வெற்றி, பதவி உயர்வு வீடுகளில் சுப காரியங்களை நடப்பதை குறிப்பதாக இருக்கிறது.

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா? | Meaning Behind Seeing Elephant In Dreams

இந்த தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாதாம்.. என்ன தெரியுமா?

இந்த தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாதாம்.. என்ன தெரியுமா?

மேலும் யானை கனவில் வருகின்ற பொழுது வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் மற்றும் நம்முடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான அறிகுறிகள் ஆகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒருவர் கனவில் கருப்பு யானை வருகிறது என்றால் அவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இது அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு சில முக்கிய பிரச்சினைகளை கொடுக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெள்ளை யானையை அவர்கள் பார்த்தால் ஒரு நல்ல அறிகுறியாக சொல்லப்படுகிறது.

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா? | Meaning Behind Seeing Elephant In Dreams

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

இது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடும். அது மட்டுமல்லாமல் ஒரு நற்செய்தி தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்ணின் கனவில் யானை வந்தால் அது ஒரு நல்ல கனவாக கருதப்படுகிறது. அவர்களுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமான குழந்தை பாக்கியம் கிடைப்பதை அவை குறிக்கிறது.

அதோடு, கனவில் யானை கூட்டத்தை பார்த்தால் அது அவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்ககூடும் என்று சொல்லப்படுகிறது.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US