முன்கூட்டியே மழைப்பொழிவை கணிக்கும் அதிசய கோயில்
பொதுவாக இந்த உலகில் நாம் பார்த்து வியந்து போகும் பல விடயங்கள் உள்ளன.
அந்த வகையில், காலநிலை குறித்து நாம் வானத்தை பார்த்து அல்லது ஊடகங்களில் கூறும் வானிலை அறிக்கை கேட்டு தெரிந்து கொள்வோம்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு ஊரில் கோயிலுக்கு சென்று அறிந்து கொள்கிறார்களாம்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயம்
உத்தரபிரதேசம்- கான்பூரில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயத்திற்கு சென்றால் எப்போது மழை பெய்ய போகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம் என கூறப்படுகின்றது. இந்த ஆலயம் சுமாராக 1000 வருடங்கள் பழைமையானது எனவும் கூறப்படுகின்றது.
ஆலயத்தின் மேற்கூரையிலிருந்து வருடம் வருடம் திடீரென நீர் சொட்ட ஆரம்பிக்கிறது. இப்படி நீர் கொட்ட துவங்கி ஏழு நாட்களில் பருவ மழை பெய்ய ஆரம்பிக்கிறது.
இதனை பார்த்து தான் அந்த பகுதி மக்கள் மழை எப்போது பெய்யும் என தீர்மானிக்கிறார்கள். அத்துடன் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதனை கூட அவர்களால் அறிந்து கொள்ள முடியுமாம்.
மேலும், இந்த கோயிலில் மழை பெய்ய ஆரம்பித்து ஏழு நாட்கள் வரை தொடர்ந்து பெய்ந்து கொண்டே இருக்கும். வெளியில் பருவ மழை ஆரம்பமானவுடன் கோயில் உள்ளே கொட்டிய மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் அப்பகுதி மக்களுக்கு கூட தெரியவில்லை.
இந்த விடயம் அறிந்து பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வந்தும் இதுவரையில் கோயிலில் நடக்கும் அதிசயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கோயிலை சுற்றி மரங்கள், மலை இப்படி ஏதுவும் இல்லாமல் எப்படி கோயிலுக்குள் தண்ணீர் வருகிறது என்பது மாயமாகவே உள்ளது.
கோயிலுக்குள் பெய்யும் மழையை பொருத்தே அந்த ஊர் மக்கள் தங்களின் விளைச்சலை ஆரம்பிப்பதாக கூறுகின்றனர்.
கோயிலின் சிறப்பு
கோயிலை யார் கட்டியது? என்ற தகவல் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக 11வது நூற்றாண்டு கடைசியில் கோயில் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது.
கோயிலின் சுற்றுச்சுவர் 14 அடி தடிமன் கொண்டதாகவும் கோயில் முழுவதும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது எனவும் ஆய்வுகள் கூறப்படுகிறது.
கோயிலின் உட்பகுதியில் லட்சுமணர், மகாவிஷ்ணு, சந்திரன், சூரியன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஜெகநாதர் சிலை 6 முதல் 7 அடி உயரத்தில் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது.
ஜெகநாதரின் இருப்பக்கங்களிலும் சுபத்திரா தேவி மற்றும் பாலபத்ரா, மகாவிஷ்ணு தசாவதாரக் கோலங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும், பார்ப்பதற்கு மிக அரிதான பஞ்சமுக விநாயகர் சிலையும் உள்ளன.
இங்கு நூறடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. இதன் உச்சியில் அமைக்கப்பட்டள்ள வட்ட வடிவிலான அமைப்பு எந்த உலோக கலவையால் செய்யப்பட்டுள்ளது என்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |