மணி பிளாண்ட் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல் மட்டுமல்ல... இந்த நன்மையும் இருக்காம்
நேர்மறை ஆற்றலை அள்ளித்தரும் மணி பிளாண்ட் செடி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக்கூடியது.
இந்த செடியை தென்கிழக்கு திசையில் அதாவது விநாயகருக்கு உரிய திசையில் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த திசையில் வைப்பது சிறப்பானது.
எந்த செடியாக இருந்தாலும் பராமரிப்பு மிகவும் அவசியம். வீட்டில் செடிகள் வளர்க்கும் பொழுது அது நம்மோடு ஒன்றாக ஐக்கியம் ஆகிவிடுகிறது, அதனால் செடிகளை வாடவிடாமல் தண்ணீர் ஊற்றி பராமரிப்பது மிக அவசியம்.
அப்படி மணி பிளாண்டில் பழுத்த இலைகள் உருவாகாமல் அதனை பார்த்து பராமரிப்பதும் மிகவும் அவசியம், ஏன் என்றால் அது நாம் வீட்டில் ஒருவரது உடல் நிலை குறைபாட்டை குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் மணி பிளாண்ட் செடியை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கக்கூடாது. அப்படி கொடுப்பதினால் நம் வீட்டில் உள்ள அதிர்ஷ்டத்தையும் சேர்த்தே கொடுப்பதாக அர்த்தமாம்.
அதே போல் மணி பிளாண்ட் செடியை திருடி வைப்பதால் அதிக அளவில் நன்மை உண்டாகிறது.
என்னதான் மணி பிளாண்ட் செடியின் பொதுவான கருத்துக்கள் இருந்தாலும் உண்மையில் இந்த செடியை நம் வீட்டில் வைக்கும்போது, பாம்பு, பூரான், தேள் போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் வருவது தடுக்க முடியும்.
காரணம், இந்த செடியின் வளர்ச்சியையும், அதன் இலைகளையும் பார்த்து விஷம் கொண்ட பூச்சிகள் வருவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த செடியை வளர்ப்பதும் எளிதான ஒன்று தான், ஏனெனில் இதற்கு சூரிய வெளிச்சம் தேவைப்படுவதில்லை.
வீட்டிற்குள் மிகவும் குறைவான வெளிச்சத்தில், தண்ணீரிலேயே நன்கு வளரும். இந்த செடியை வெளியிலும், தொட்டியிலும்கூட வளர்க்கலாம். இது கொடிபோல் படரும் தன்மை கொண்டது.
மேலும் வாடிய இலைகள் இருந்தால், அதை உடனடியாக அகற்றிவிடுவது, செடியின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையும்.
வாரம் ஒரு முறை செடியில் உள்ள தண்ணீர் மாற்ற வேண்டும்.
ஏனென்றால் இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் இவற்றை வாயில் வைக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
நாம் பிஸியான வாழ்க்கை முறையில் பலரால் செடிகள் வளர்த்து பராமரிக்க முடியவில்லை என்றாலும் எளிதான முறையில் வீட்டில் சுலபமாக வளரக்கூடிய மணி பிளான்ட் வளர்த்து வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரப்புவோம்.