சனி பகவானை வாலால் கட்டிவைத்திருக்கும் அனுமன்- சனி தோஷம் போக்கும் ஆலயம்
அனுமனுக்கு இந்தியா முழுவதும் ஆலயங்கள் ஏராளம். அதில், ஒவ்வொரு ஆலயங்களிலும் அனுமன் நின்ற கோலத்திலே பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ஆனால் இந்த இடத்தில் மட்டும் அனுமன் சனி பகவானை தன் வாலால் கட்டி வைத்தவாறு சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எங்கும் காணக்கிடைக்காத இந்த அற்புதமான திருத்தலம் எங்கு அமைந்து இருக்கிறது என்று பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற இடத்தில் ஒரே கல்லால் ஆன சயன கோல ஆஞ்சநேயர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இந்த ஆலயத்தை "மோதா மாருதி" என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆலயம் சுமார் 8 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று சொல்லுகிறார்கள். அதாவது பல நூறு ஆண்டு காலங்களுக்கு முன்னதாக லோனார் பகுதியில் விண்கல் ஒன்று விழுந்ததாகவும், அவ்வாறு அங்கு விண்கல் விழுந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பள்ளம் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது அந்த விண்கல் விழுந்த பள்ளத்தில் ஒரு ஏரி ஒன்று காணப்படுகிறது. இதனை லோனார் ஏரி என்றும் அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இந்த ஏரியின் அருகிலே தான் மோதா மாருதி ஆலயம் அமைந்துள்ளது.
அதாவது ராமாயணத்தில் ராவணனுடன் போர் முடித்த பிறகு ராமபிரான் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனுமன் சிறிது காலம் போய் எடுக்க வேண்டும் என்று விரும்பி இந்த இடத்திற்கு வந்ததாக தல வரலாறு நமக்கு சொல்கிறது.
அதனால் இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் சரிவான ஒரு படுக்கையின் மீது சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர் ஒன்பது புள்ளி மூன்று அடி நீளம் கொண்டவராக இருக்கிறார்.
வலது காலை நீட்டிய நிலையில் சயனித்திற்கும் அனுமனின் இடது கால் சற்று மடங்கிய நிலையில் இருக்கிறது. இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய பாதத்திற்கு கீழ் சனி பகவானின் சிற்பம் ஒன்று உள்ளது.
அதாவது, ஜோதிட ரீதியாக சனிபகவானுடைய தாக்கங்கள் விலக வேண்டும் என்றால் நம் பற்றி கொள்ள வேண்டிய தெய்வமாக விநாயகரும் ஆஞ்சநேயரும் தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு முறை ஆஞ்சநேயரை பிடித்துக் கொள்ள வந்த சனி பகவானை அவர் தன்னுடைய காலடியில் வைத்து அழுத்தினார்.
இதை அடுத்து சனி பகவான் ஆஞ்சநேயரை பிடிப்பதே இல்லை என்றும் அதோடு எங்கெல்லாம் எவரெல்லாம் ராம நாமம் உச்சரித்து வருகிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் கடுமையான துன்பங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுகிறார்கள் என்றும் புராணங்கள் நமக்கு சொல்கிறது.
இதன் அடிப்படையில் தான் தன்னுடைய காலடியில் சனிபகவானை அழுத்திய நிலையில் இந்த தல ஆஞ்சநேயர் நமக்கு அருள் வழங்குகிறார். இங்கு வந்து இவரை வழிபாடு செய்தால் கட்டாயம் ஏழரை சனி, அஷ்டம சனி, சனி தோஷம், சனி திசை போன்ற பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |