ஆண்டிக்கோலத்தில் முருகரை எப்பொழுது தரிசனம் செய்யலாம்?
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பல கோடி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்.அப்படியாக எல்லா கடவுள்களும் பல அலங்காரத்தில் காட்சி கொடுத்தாலும் முருப்பெருமான் மட்டும் தான் பல விதமான அலங்காரத்தில் வாழ்க்கையை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வருகிறார்.
மேலும் முருக பெருமான் ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.இப்பொழுது முருகப்பெருமான் அலங்காரத்தையும் நாம் அதை எந்த சூழ்நிலையில் இருக்கும் பொழுது தரிசனம் செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
நம்மில் பலருக்கும் எத்தனை பரிகாரங்கள் செய்து இருந்தாலும் சில பிரச்சனைகள் தீராத ஒரு பிரச்சனையாக இருக்கும்.அப்பொழுது தானாக மனம் குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்.அப்படி தீராத மனஉளைச்சலில் இருப்பவர்கள் ஆண்டிக்கோலத்தில் உள்ள முருகனை வழிபடலாம்.
அவ்வாறு அவர்கள் ஆண்டிக்கோலத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையிலும் மன நிலைமையிலும் நல்ல மாற்றம் ஏற்படும். சுயநலமாக வாழ ஆரம்பித்த இந்த உலகில் பிறரால் நிறைய மனவருத்தங்கள் துரோகங்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க கூடுகிறது.
அவர்களும் கண்டிப்பாக ஆண்டிக்கோலத்தில் உள்ள முருக பெருமானை தரிசனம் செய்ய வாழ்க்கை ஒரு சமநிலைக்கு வரும்.மேலும் தீராத வியாதிகள் மற்றும் அதிக உடல் உபாதைகள் இருப்பவர்களும் இந்த முருகனை வழிபட வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும்.
அதுமட்டும் அல்லாமல் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக்கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக ஞானிகளெல்லாம் ஆண்டிக்கோலத்தை தான் விரும்பி காண்பார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் ஆவார். மேலும் வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியவர் செவ்வாய்.ஆக அவரை வழிபட வாழ்க்கையில் எப்பொழுதுமே நல்ல மாற்றம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |