நாகபட்டினத்தின் சக்தி வாய்ந்த கோயில்களின் பட்டியல்
1.அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில்,திருமுல்லைவாசல்
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.மேலும் அன்றைய காலத்தில் இங்கு இருந்த முல்லை செடிகளால் இந்த இடம் பெயர் பெற்றது.
வாசல் இது உப்பனாறு ஆற்றின் ஒரு திறப்பு அல்லது கடல் நுழைவாயிலாக இருந்ததைக் குறிக்கிறது. பழங்காலத்தில், சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருமுல்லைவாசலில் இருந்து வேறுபடுத்துவதற்காக, இந்த இடம் தென் திருமுல்லைவாசல் என்று அழைக்கப்பட்டது.
திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். இக்கோயிலில் சிவ பெருமான் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலின் சிவ லிங்கத்தின் மேல் வாளால் வெட்டப்பட்ட தழும்பு ஒன்றை நாம் இப்பொழுது கவனிக்க முடியம்.பொதுவாக எல்லாம் பெரிய சிவன் கோயில்கள் பள்ளியறை என்பது கட்டாயம் உண்டு.
ஆனால் இங்கு காலை மாலை என்று இருவேலையிலும் பள்ளியறை பூஜை நடக்கும்.இருந்தாலும் இக்கோயிலில் பள்ளியறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள இறைவனின் திருநாமம் யுதிகாபரமேஸ்வரர் இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி ஆகும்.இக்கோயில் 1300 வருடம் முன்னதாக கட்டப்பட்டது.இத்தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும்.
இடம்
அருள்மிகு. முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் ,சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் - 609 113.
வழிபாட்டு நேரம்
காலை 8 மணி முதல் 12.30 வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
2.அருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன்,நாகப்பட்டினம்
அம்மன் என்றாலே சக்தி வாய்ந்தவள் தான்.சிவம் இல்லையே சக்தி இல்லை.சக்தி இல்லையே சிவம் இல்லை என்பது போல்.அம்மன் மக்களுக்கு துயர் தீர்ப்பவளாக பல அவதாரம் எடுத்து அருள் பாலிக்கின்றார். அப்படியாக நாகப்பட்டினத்தில் ஸ்ரீசௌந்திர ராஜ பெருமாள் வீதியில் நெல்லுக்கடை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
அந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. அந்த கோயில் தல வரலாற்றை பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு அவதாரம் பின்னாடியும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கிறது அப்படியாக நாகப்பட்டிணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் , சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார்.
இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பொழுது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து , நெல் வேண்டும் என்று கேட்டார். அம்மையார். நெல்லை அளந்து கூடையில் வைத்து விட்டு , அதற்குரிய காசைவாங்க திரும்பிய பொழுது , அந்த பெண்மணியைக் காணவில்லை.
நெல்லும் அப்படியே இருந்தது. அன்று இரவு அம்மையாரின் கனவில் தோன்றிய அப்பெண்மணி உன் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் புற்றுருக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.
மறுநாள் அம்மையார் சென்று அவ்விடத்தைப் பார்க்க மரத்தடியில் அப்புற்றுக்கு மஞ்சள் , குங்குமம் இட்டு வழிபட்டு வந்தனர் மக்கள்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் அம்மையாரின் வாரிசுகளால். மக்கள் வழிபட்ட மரத்தடியில் , அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்தார்கள் இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பிரிந்த தம்பதியர் இந்த நெல்லுக்கடை அம்மனை வழிபட ஒன்று சேருவார்கள் என்று நம்பிக்கை.மேலும் குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு அம்மனே குழந்தையாக பிறப்பர் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 12.00 வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை
3.அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்,திருவெள்ளக்குளம்
தெரிந்தோ தெரியாமலோ செய்த செயலை காலம் கடந்து உணரும் முன் அது மிக பெரிய பாவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அப்படியாக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கும் , ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷத்திற்கும் நிவர்த்தியாக நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெள்ளக்குளம் "அண்ணன் பெருமாள் கோயில்".
இந்த தலத்திலுள்ள சிறப்பு என்னவென்றால் இங்குள்ள சுவேத புஷ்கரணியில் நீராடினால் செய்த பாவம் எல்லாம் விலகி விடுகிறது.மேலும் ஜாதக ரீதியாக எந்த ஒரு தோஷம் இருந்தாலும் இங்கு வந்து நீராட அது விலகுகிறது என்பது ஐதீகம். 'அண்ணன் பெருமாள் கோயில்’ சீர்காழியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில்அமைந்துள்ளது.
இத்திருத்தலில் பலவேறு புராண அதிசயங்கள் நடந்திருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.இங்கு மூலவர் ஸ்ரீ அண்ணன் பெருமாள் நின்ற திருக்கோலம், உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார் பூவாரி திருமகள். உற்சவர் பத்மாவதி,தீர்த்தம் சுவேத புஷ்கரணி. விமானம் தத்வதோதக விமானம்.
மேலும் ருத்ரருக்கும் ஸ்வேதராஜனுக்கும் திருமால் காட்சிதந்த புண்ணியஸ்தலம். சூர்ய குமாரனது மகன் துந்துகுமாரன் என்னும் அரசகுமாரன் தன்னுடைய ஒன்பதாவது வயதில் மரணம் ஏற்படும் என்பதை முன்னதாக அறிந்து ,அதை தடுக்க மறுத்த முனிவரிடம் சென்று உபதேசம் பெற்றான்.
பின்னர் நேராக திருமால் குடி கொண்டிருக்கும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு வந்து இங்குள்ள புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கித் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த பெருமான் துந்து குமாரனுக்கு நீண்ட ஆயுளைப் பெற்றுத் தந்தார்.
மார்க்கண்டேயனைப் போல் சாகாவரம் தந்தார். அத்தகைய பெருமை பெற்ற தலம் இது. இன்னொரு சமயம் தேவலோக நங்கைகளில் ஒருத்தியான குமுதவல்லி இந்த தலத்து புஷ்கரணியிலுள்ள குமுத மலர்களைப் பறித்துச் செல்ல வந்தபோது திருமங்கை மன்னனிடம் காதல் கொண்டாள்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்க திருமங்கை மன்னனும் அவ்வாறே நிறைவேற்றி கடைசியில் அரசபதவியைத் துறந்து குமுதவல்லியை மணந்து ஆழ்வாராக மாறினார்.
திருமங்கையாழ்வார், குமுதவல்லியை மணம் செய்து கொண்ட தலம். தாயார் சன்னதியில் குமுதவல்லிக்கும் ஒரு தனி சன்னதி உண்டு. வடவேங்கட ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்பதால். திருப்பதிக்கு வேண்டிக் கொண்டதை அங்கு செலுத்த முடியாதவர்கள் இங்கு செலுத்தலாம்.
மேலும் திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற புண்ணிய தலம் என்ற பல்வேறு சிறப்புக்கள் கொண்ட இப்பெருமாளை தரிசித்து வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெறுவோமாக.
இடம்
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோவில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர் ) - 609 106
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 4.அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,நாகப்பட்டினம்
4.அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,நாகப்பட்டினம்
திருமண தடை ராகு கேது தோஷம் இருப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய தலம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.இக்கோயில் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 22வது சிவத்தலமாகும்.
இத்தலம் கிழக்கு முகம் கொண்ட சிறிய கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்தல இறைவன் ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளில் இருந்து மக்களை காக்கும் இறைவனாக அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம்.
எனவே, இத்தல இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்மேலும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க கல்வியில்,இவரை வழிபட்டால் நல்ல மாற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தல இறைவனை வருணன், அரிச்சந்திரன் வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கோயில் பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் அருள்பாலிகின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே உள்ளார்.
எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும்.ஆதிசங்கரருக்கு தனி சன்னதி உள்ளது.
இடம்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – பாண்டூர் அஞ்சல் – 609 203, (வழி) நீடூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
5.அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்,சீர்காழி
இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும்.இக்கோயில் சிவ பெருமான் சுயம்புவாக தோன்றி அருள்பாலித்து வருகிறார்.இந்கு என்ன விஷேசம் என்றால் இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது.
மேலும் இக்கோயிலில் திருஞான சம்பந்தருக்கு தனி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் இடையே சம்பந்தர் சன்னதி இருக்கிறது.
இப்படி பட்ட அமைப்பை சோமாஸ்கந்த அமைப்பு என்று சொல்வார்கள்.மேலும் இத்தலத்தில் 22 தீர்த்தம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.இங்கு சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் நடைபெறும்.
இடம்
அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி – 609 110, நாகப்பட்டினம் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |