நாளை (18.08.2024)ஆவணி மாத பௌர்ணமியில் கட்டாயம் இந்த வழிபாடு செய்யுங்கள்

By Sakthi Raj Aug 18, 2024 07:00 AM GMT
Report

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துவிட்டது.இந்த ஆவணி மாதத்தில் நிறைய சிறப்புக்கள் விரதங்கள் முக்கிய நிகழ்வுகள் வருகின்றது.அபப்டியாக நாளை ஆவணி மாதம் பௌர்ணமியில் விரதம் இருப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது அதை பற்றி பார்ப்போம்.

ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. அது போன்றே இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமிக்கு ஏற்றார்போல் வழிபாடு செய்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நாளை (18.08.2024)ஆவணி மாத பௌர்ணமியில் கட்டாயம் இந்த வழிபாடு செய்யுங்கள் | Nalai Aadi Pournamiyil Veetil Seiyavendiyavai

அந்த வகையில் ஆவணி மாத பௌர்ணமியில் (ஆகஸ்ட் 19ஆம் தேதி), அம்பிகையை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழலாம்.

அடுத்த படியாக ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, ஆபரணங்களை அணிவித்து பூஜை செய்ய வேண்டும்.

மேலும் நாட்டு சர்க்கரையால் அபிஷேகம் செய்து, முக்கனிகள், கற்கண்டு, பொங்கல் மற்றும் நெய் சாதம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகனை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?

திருச்செந்தூர் முருகனை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?


இந்த பூஜையை செய்வதன் மூலம் திருமணத்தடை நீங்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர், தீராத கடன்கள் தீரும் மற்றும் பண வரவு அதிகரிக்கும்.

பௌர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜையை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US