செவ்வாய் தோஷம்: நந்திக்கு தாலி கட்டும் கோயில் பற்றி தெரியுமா?
நந்தியை சிவனின் வாகனமாக புராணங்கள் கூறுகின்றன, பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு மட்டுமல்லாது நந்தி தேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்நாளில் நாம் வேண்டிக்கேட்கும் பிரார்த்தனைகளை நந்தி தேவர் நிறைவேற்றுவார் என்பதும் நம்பிக்கை.
சிவபெருமானின் முதல் சீடரும் நந்தியே, இந்த பதிவில் நந்தி தேவருக்கு தாலி கட்டும் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் கோடகநல்லூரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ கயிலாயநாதர் ஆலயம்.
நவக்கிரகங்களின் செவ்வாய் தலமாக இது விளங்குகிறது.
தல வரலாறு
ஆதிகாலத்தில் முனிவர் ஒருவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு உதவியாக வந்த குமாரர் யாகத்துக்கு தேவையானவற்றை சேகரிக்க சென்றிருநந்தார்.
காட்டுக்கு வேட்டையாட வந்த பரீட்சித் மகாராஜாவின் மகன் முனிவர் யாகம் செய்யும் வழியே வந்துள்ளார்.
அவர் எவ்வளவோ அழைத்தும் முனிவர் யாகத்திலேயே இருந்துள்ளார், இதனால் கோபம் கொண்ட ராஜகுமாரன் இறந்த பாம்பு ஒன்றை முனிவரின் கழுத்தில் போட்டுள்ளார்.
தன் தந்தையின் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவரின் குமாரன், இதனை செய்தது அரசு குமாரன் தான் என தெரிந்து கொண்டார்.
அப்போது உனது தந்தையும் பாம்பு தீண்டியே இறப்பார் என சாபமிட்டார். இதை தெரிந்து கொண்ட பரீட்சித் மகாராஜா, தன்னுடைய ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
தன்னுடைய உயிரை காப்பாற்ற ஏழு கடல் ஏழு மலை தாண்டி கப்பலில் மணிமண்டபம் கட்டி வசிக்கவும் தொடங்கினார்.
ஆனால் விதி யாரை விட்டது, கார்கோடகன் என்ற பாம்பானது மன்னர் சாப்பிடும் பழத்தில் சிறு புழுவாக மாறி மன்னரை தீ்ண்ட இறந்து போனார்.
பரீட்சித் மகாராஜாவை தீண்டிய தோஷத்திற்காக சாப விமோசனம் வேண்டிய கார்கோடகன் பாம்பின் முன் தோன்றிய திருமால், இந்த ஊருக்கு வந்து வேண்டினால் முக்தி கிடைக்கும் என கூறினார்.
இதன்படி கார்கோடகன் பாம்பும் முக்தி பெற்றது, இதனாலேயே கார்கோடகநல்லூர் என்ற பெயரும் பெற்றது.
இங்கு கோபுரம், கொடிமரம் எதுவும் கிடையாது, தலவிருட்சம் வில்வமரம் ஆகும், செவ்வாயின் பரிகார தலமாக இது பார்க்கப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், தாலிக்கயிற்றில் 58 விரலி மஞ்சளை மாலையாக நந்தி தேவருக்கு அணிவித்தால் திருமணம் நடைபெறும்.