சிங்கிரிகுடியில் வருகின்ற மே 22 லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

By Sakthi Raj May 20, 2024 06:30 AM GMT
Report

தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது

சிங்கிரிகுடியில் வருகின்ற மே 22 லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் | Narasimar Vazhipadu Therottam May 22 Hindu News

கடலூர்: கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில்பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 14- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்


18- ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் வழிபட்டனர்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமி மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது.

சிங்கிரிகுடியில் வருகின்ற மே 22 லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் | Narasimar Vazhipadu Therottam May 22 Hindu News

வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்ட விழா வருகிற 22- ந்தேதி நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும்.

அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 25- ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றன.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US