ஒரே கருவறைக்குள் இரண்டு சக்தி வாய்ந்த அம்மன்
தமிழ் நாட்டில் நீலகிரி மக்கள் மத்தியில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கிகிறது.மக்கள் பலரும் விடுமுறை நாட்களில் ஊட்டியின் காலநிலைக்காக பல்வேரு இடங்களில் இருந்து செல்கின்றனர்.அப்படியாக நீலகிரியில் கண்காட்சிகள்,பூங்கா இவை எல்லாம் தாண்டி பழமை வாய்ந்த கோயில்களும் இருக்கிறது.ஆனால் மக்கள் அதை கவனிக்க தவறுகின்றனர்.இப்பொழுது நீலகிரி சென்றால் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோயில்களை பற்றி பார்ப்போம்.
1.அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,ஊட்டி
இந்த கோயில் ஊட்டியின் மிக பழமையான கோயில் ஆகும். ஆறு சித்தர்களின் நினைவாலயம் கொண்ட கோவில் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது இந்த காசி விஸ்வநாதர் திருக்கோயில். இக்கோயிலில் பாணலிங்கமே மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இக்கோயிலின் மிக சிறப்பு.
இறைவன் கிழக்கு நோக்கியும் ,சன்னிதியில் தெற்கு நோக்கிய அன்னை விசாலாட்சி எளிய வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.பாணாசுரன் எனும் அரக்கன் நதிக்கரையில் வழிபாடு செய்த, பூணூல் ரேகை கொண்ட லிங்கமே ‘பாணலிங்கம்’ எனப்படுகிறது.
ஆயிரம் கல் லிங்கத்திற்கு இணையானது ஒரு ஸ்படிக லிங்கம். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு இணையானது, ஒரு பாணலிங்கம் என சான்றோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நர்மதை நதியில் கிடைத்த இந்த பாணலிங்கம் அபூர்வ சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது.மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார்.
சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும்.
இடம்
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி – 643 001, நீலகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
2.அருள்மிகு நாகராஜர் திருக்கோயில்,மஞ்சக்கம்பை
ஊட்டியில் பிரபலமான கோயில்களில் அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் ஒன்றாகும்.அதாவது இக்கோயிலில் மூலஸ்தானத்துகுள் நீண்ட நாட்களாக ஒரு நாகம் உயிரோடு இருப்பதாகவும் அந்த நாகம் அடிக்கடி பக்தர்களுக்கு காட்சி தருகிறது என்றும் அங்குள்ள மக்கள் சொல்லுகின்றனர்.
மேலும் அந்த நாகமானது தானாகவே சுரங்கப்பாதை அமைத்து அருகிலிருக்கும் ஹெத்தையம்மன் ஆலயத்திற்கு வந்து போகின்றது என்று சொல்லுவது குறிபிடிக்கத்தக்கது.இக்கோயில் மிகவும் இயறக்கை சூழலோடு அமைய பெற்று இருப்பதால் அந்த அழகை ரசிக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இராமர் அயோ த்திக்கு திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இக்கோயிலுக்கு நாக தோஷம் உள்ளவர்கள் அதிகம் வருகி தருகிறார்கள்.நாக தோஷத்தால் வாழ்க்கையில் தடங்களை சந்திப்பவர்கள் நாகராஜர் கோயிலில் உள்ள புற்றில் பால் மற்றும் பழத்தை வைக்கின்றனர். அமாவாசை நாட்களில் இவ்வாறு தொடர்ந்து வேண்டிக்கொண்டால் கூடிய விரைவில் தோசம் விலகுகிறது என்பது நம்பிக்கை.
மேலும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்கள் நாகராஜர் ஆலயத்தில் பூஜை செய்து விட்டு சந்தான லட்சுமி அம்மன் சன்னதிக்கு சென்று அரைகால் வெள்ளை துணியையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்து சென்று பூஜை செய்ய வேண்டும். பின்னர் அம்மன் கோயிலை வலம் வந்து அங்குள்ள மரத்தில் வெள்ளை துணியால் தொட்டில் கட்ட வேண்டும்.
இவ்வாறு கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்று சந்தோசம் அடைகின்றனர்.
இடம்
அருள்மிகு ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
3.அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,எலக் மலை
நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோவில் இந்த பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகும்.இக்கோயில் சுமார் 7500 அடி உயரத்தில் அமையப்பெற்று இருக்கிறது.மேலும் நாற்பது அடி உயரம் கொண்ட முருகன் சிலையை கோயிலின் இடதுபுறம் காணலாம்.இந்தியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் அமைப்பு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைப் போலவே உள்ளது சிறப்பு.இங்கு என்ன விஷேசம் என்னவென்றால் முருகன் தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது தான்.நாராயண தீர்த்தத்திலிருந்து எடுக்கப்படும் நீர்தான் முருகனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இக்கோயிலில் சித்தி விநாயகர் பத்ரகாளியம்மன் சொர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்ட புஜ துர்க்கை ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரி தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.குழந்தை வரம் இல்லாதவர்கள் நிச்சயம் இந்த முருகனை வந்து தரிசனம் செய்ய கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இடம்
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
4.அருள்மிகு சந்தைக்கடை மாரியம்மன்,உதகை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோயில் திகழ்கிறது.இன்னும் சொல்ல போனால் நீலகிரி மாவட்ட மக்களின் காவல் தெய்வங்கள் இந்த சந்தைக்கடை மாரியம்மன் வணங்கப்படுகிறாள்.
ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயமான இங்கு,36 நாள்கள் பிரம்மோற்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலில் திருவிழா மிக சிறப்பாக கொண்டப்படும்.இத்திருவிழாவின்போது, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பர்ய முறைப்படி அம்மனுக்கு அலங்காரம்செய்து தேர்பவனி நடத்துவது வழக்கம்.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றி இருக்கும் அறியத்தலம்.இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.
மேலும்,இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு குழந்தைகளுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இங்கு ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இடம்
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி மாவட்டம் – 643 001.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
5.அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில்,குன்னுர்
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில் மிக முக்கியமான கோயிலாக அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில் விளங்குகிறது.இக்கோயிலில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.இங்கு அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது.
அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை காட்டப்படுகிறது. பிரகாரத்தில் முருகன், காத்தாயி அம்மன், கருமாரியம்மன், காமாட்சியம்மன், வனபத்திரகாளி, வனதுர்க்கை ஆகியோர் அருள்புரிகின்றனர்.
கண்டிப்பாக நீலகிரி சென்றால் இந்த அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்கும்.
இடம்
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில் , குன்னூர்- 643 101. நீலகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |