நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களா? உங்களுக்கான வாழ்நாள் பலன் இதோ

By Sakthi Raj Jun 28, 2026 10:28 AM GMT
Report

   ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கங்கள் பெற்றிருக்கும். அதனால், அவர்களுடைய வாழ்க்கை அந்த கிரக நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

அப்படியாக, 1, 10, 19, 28 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த தேதியை ஆளக்கூடிய கிரகமாக சூரியன் இருக்கிறார். அதனால் இவர்கள் எப்போதும் தாங்கள் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்ப கூடியவர்கள்.

அதே சமயம் இவர்களிடம் அதிகமான ஈகோ மற்றும் பிடிவாத குணம் இருக்கும். இவர்களுக்கு 3,5,6,9 ஆகிய தேதிகள் மற்றும் எண்கள் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது 4,8, ஆகியவை இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

இவர்கள் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்ப்பது ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் உடல் வெப்பம் மற்றும் எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும்.

வாஸ்து: வீடுகளில் இந்த மரம் வைத்தால் தோஷம் உண்டாகுமாம்

வாஸ்து: வீடுகளில் இந்த மரம் வைத்தால் தோஷம் உண்டாகுமாம்

அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரை மற்றும் தேன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் சிறப்பாக அமையும். இவர்கள் வாழ்க்கையில் வளம் பெறவும் நிலையான செல்வம், வருமானம், பெயர், புகழ் பெற காலையில் சூரிய வழிபாடு செய்வது சிறப்பு.

அதேபோல், இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் 3, 5, 6 ஆகிய எண்கள் கொண்டவர்களை தேர்வு செய்வது நன்மை தரும்.

ஒன்று மற்றும் எட்டு எண்கள் கொண்டவர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், இவர்கள் வாழ்க்கையில் வளம் அடைய என்னென்ன விஷயங்கள் பின்பற்றினால் நல்லது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US