அட்சய திருதியை அன்று இந்த ஒரு பொருளை வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
அட்சய திருதியை என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான சுப தினம் ஆகும். இந்த நாளில் நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அது இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்கிறார்கள். பலரும் அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி நகை வாங்கி சேர்க்க விரும்புவார்கள்.
காரணம், இவை செல்வத்தின் அடையாளமாக காணப்படுவதால் அவை அன்றைய தினம் வாங்கும் பொழுது நமக்கு செல்வ செழிப்பை மென்மேலும் வளரச்செய்கிறது. இருந்தாலும், தங்கம் வெள்ளி இவை எல்லோராலும் எளிதாக வாங்க கூடிய பொருட்கள் அல்ல.
அப்படியாக, அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் வீட்டில் இந்த ஒரு பொருளை வாங்கினால் போதும் அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். இந்த 2025 ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் மஹாலக்ஷ்மியின் அருளை பெற மிகவும் எளிதான இந்த பொருளை வாங்கினால் போதும். அதாவது, நம்முடைய இந்து மதத்தில் உப்பு என்பது மிகவும் தெய்வீக தன்மை கொண்ட பொருளாக பார்க்க படுகிறது.
அதனால் அட்சய திருதியை அன்று வீடுகளில் உப்பு வாங்குவது வீட்டில் மஹாலக்ஷ்மி தாயாரின் அருளை பெற்று கொடுப்பதோடு, குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் வளரச்செய்கிறது. இந்த உப்பு எல்லோராலும் எளிமையாக வாங்க கூடிய பொருளாகும்.
மேலும், அட்சய திருதியை அன்று உப்பு வாங்குவதால் நம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உண்டாகிறது. இந்த உப்பு சனியுடன் தொடர்புடைய ஆற்றல்களைச் சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
அதனால் அட்சய திருதியை அன்று வீட்டில் உப்பு வாங்குவதால் பொருளாதார நஷ்டம் விலகி அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும் வெற்றியும் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |