12 ராசிகளும் இந்த ஒரு விஷயத்தை கைவிட்டால் வாழ்க்கை அமோகமாக மாறிவிடும்
ஜோதிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக 12 ராசிகளும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கைவிட்டால் அவர்கள் வாழ்க்கை அமோகமாக மாறுமாம். அது என்னவென்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் பிடிவாதத்தை விட்டு விட்டால் வருகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறி விடலாம்.
ரிஷபம்:
இவர்கள் முடிவு எடுக்கும் பொழுது நிலையான தன்மை இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியாமல் போகிறது. உறுதியான முடிவு எடுத்தால் வாழ்க்கை மாறும்.
மிதுனம்:
எப்பொழுதும் நடந்தவற்றையே நினைத்துக் கொண்டு இருப்பதால் இவர்கள் நிகழ்காலத்தில் உள்ள மகிழ்ச்சியை இழந்து விடுகிறார்கள்.
கடகம்:
இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் யோசிப்பதற்கு பல நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் பல வாய்ப்புகள் இவர்களிடம் இருந்து தட்டிப் போகிறது.
சிம்மம்:
இவர்கள் ஈகோவா சில முக்கிய மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். அதை மாற்றிக் கொள்ளலாம்.
கன்னி:
நல்ல விஷயமாகவே இருந்தாலும் அதில் எப்பொழுதும் குறை கண்டு கொண்டே இருப்பார்கள். அதை தவிர்த்தால் நல்லது.

துலாம்:
ஒரு விஷயத்தை இவர்கள் திரும்பத் திரும்ப ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். அதனால் மனவிரக்தி ஏற்படுகிறது.
விருச்சிகம்:
எல்லா இடங்களிலும் நிறை குறை இருக்கும். அதை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இருந்தாலே இவர்களுக்கு நன்மை உண்டாக்கும்.
தனுசு:
மிகுந்த நேர்மை குணத்தோடு இருப்பார்கள். இருப்பினும் பிடிவாதம் மாற்றிக் கொண்டால் நன்மை தரும்.
மகரம்:
இவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். சில சமயம் முக்கியமானவர்களுடைய பேச்சை கேட்டால் நன்மை உண்டாக்கும்.
கும்பம்:
இவர்கள் சொந்தங்களை அதிக அளவில் நம்பி விடுவார்கள். பல நேரங்களில் அங்கு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
எந்த விஷயத்தையும் யோசிக்காமல் அசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடியவர்கள். ஆதலால் யோசித்து நிதானம் மேற்கொள்வது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |