தீபாவளியன்று இந்த ஒரு விஷயம் மட்டும் செய்ய மறக்காதீர்கள்
இந்துமத பண்டிகைகளில் தீபாவளி என்பது மிக முக்கியமாக அனைவராலும் விரும்பி கொண்டாட கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த தீபாவளி திருநாளில் உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வீடுகளில் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் புத்தாடைகள் வாங்கி இனிப்புகள் செய்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
மேலும் தீபாவளி பண்டிகையை பொறுத்த வரை நம்முடைய குடும்பங்களுடன் சேர்ந்து நாம் நிறைய மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவோம். இந்த தீபாவளி பண்டிகையின் நாளில் உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
ஆதலால் இந்த மகிழ்ச்சியை இன்னும் எல்லோருக்கும் சென்றடையும் விதமாகவும் நாம் லட்சுமி தேவியின் அருளை பெற வழியாகவும் நாம் இந்த நாளில் நாம் எவ்வளவு சந்தோஷத்தை பெறுகின்றமோ அவ்வளவு சந்தோஷத்தை நாம் பிறருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது தீபாவளி திருநாளில் முடிந்த வரை முடியாதவர்களுக்கு தேடி சென்று நாம் இனிப்புகள் புத்தாடைகள் பட்டாசுகள் அவர்களுக்கு வழங்குவதால் நம் வீடுகளில் மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு நமக்கும் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றமும் கிடைக்கும்.
மேலும் நாம் ஒருவருக்கு உதவி செய்வதால் நம்முடைய மனம் மகிழ்ந்து அடையும். இதனால் மனதில்நேர்மறை சிந்தனை உருவாகி நாமும் நம் சுற்றி உள்ளவர்களையும் இயல்பாகவே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் உருவாகும்.
ஆக பண்டிகை என்பது நாம் நம் குடும்பத்துடன் மட்டும் மகிழ்ச்சியாக கொண்டாட கூடியதாக அமைந்துவிடாமல் பண்டிகை நாளில் நம்மால் முடியாதவர்களுக்கும் உதவி செய்து அவர்களுக்காக ஒரு நொடி பொழுது நம்முடைய நேரத்தில் செலவு செய்து அவர்களை மகிழ்விக்கும் பொழுது அந்த மகாலட்சுமி தேவியை மனம் மகிழ்ந்து நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ஆசிர்வாதத்தை குறைவின்றி வழங்குகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







