ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் - சிறப்புமிக்க ஆலயமும் அதன் வரலாறும்
கங்கை கொண்டான் என்று அழைக்கப்படும் ஊத்துக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயில், அப்பகுதியின் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில், எல்லையம்மன் தனது எல்லையைக் காப்பவளாகவும், பக்தர்களுக்குத் துணையாக இருப்பவளாகவும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள், வழிபாடுகள் மற்றும் விழாக்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
தல வரலாறு:
இந்த கோயிலின் வரலாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை மண்டலத்தை ஆண்ட விஜய நகரமான கிருஷ்ணதேவரோடு தொடர்புடையது. ஒரு முறை மன்னர் கிருஷ்ணதேவராயர் தனது நாயுடன் வேட்டையாட காட்டுக்கு சென்றார். நீண்ட நேரம் வேட்டையாடியதால் தாகம் அதிகரித்து அவர் ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தார்.
அப்போது மன்னரின் நிலையை புரிந்து கொண்ட அவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள ஒரு நீர்நிலையை தேடிச்சென்றது. அருகில் இருந்த நீருற்றில் தனது உடலை நனைத்துக் கொண்டு மன்னரிடம் திரும்பி வந்தது. நாயின் செயலை கண்ட மன்னன் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதன் பின் சென்றார்.
அந்த நீர்நிலைக்கு சென்ற போது அங்கே ஒரு எலுமிச்சை பழம் மிதந்து வந்தது. அதை கண்ட மன்னன் ஆச்சரியப்பட்ட போது, அந்த இடத்திலிருந்து ஒரு அம்மன் சிலை மேல் நோக்கி எழுந்து வந்தது. இந்த அரிய காட்சியைக் கண்ட மன்னன் அம்மன் சிலையை அங்கிருந்து வெளியே கொண்டு வந்து வழிப்பட தீர்மானித்தார். அவ்வாறு அம்மன் சிலை கிடைத்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டு வழிப்பாடு செய்யப்பட்டது.
அம்மன் கோயில் இருந்த பகுதியில் வெப்பம் அதிகரிக்க பொதுமக்கள் அச்சப்பட்டனர். எனவே நாகல் நாயுடுவின் கனவில் தோன்றிய அம்மன், தன்னை ஊரில் கிழக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படி அம்மன் சிலை தற்போது கிழக்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இன்று வரை இந்த வரலாறுடன் தொடர்புடைய பல அம்சங்கள் கோயிலில் காணப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் கருவறையில் உள்ள அம்மனின் பார்வை சற்று கனிந்த நிலையில் தாழ்வாக நோக்கியவாறு உள்ளது. மேலும் இந்த கோயில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகும் இருந்து வேண்டி வரங்களை அருளி வருகிறது.
பெயர் காரணம்:
மன்னரின் மெய்காப்பாளரான நாகல் நாயுடுவின் உதவியோடு அம்மன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. இந்த அம்மன் சிலை காட்டின் எல்லையில் இருந்த ஊற்றில் இருந்து கிடைத்ததால் அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்ற பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்த பேர் மருவி ஊத்துக்காடு என ஆனது.
இந்த ஆலயம், ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், ஊத்துக்காடு கிராமத்தின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் இங்குள்ள வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
தல அமைப்பு:
இந்த கோயில் ஒரு சிறிய அளவினால் கோயில் என்றாலும் அதன் ஆன்மீக சக்தி மிகவும் ஆழமானது. கோயில் வளாகம் தூய்மையாகவும் அமைதியாகவும் பராமரிக்கப்படுகிறது, அம்மன் கம்பீரமான தோற்றத்துடனும் சக்தி வாய்ந்ததாகவும் காட்சி அளிக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் அம்மனின் அருளைப் பெற்று மன நிம்மதி அடைகின்றனர்.
ராஜகோபுரம்:
இந்த கோயில் ஐந்து நிலைகளைக் கொண்ட பிரமாண்டமான ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. இது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கோயில் கருவறை:
கோயிலின் கருவறைக்கு முன்பு துவார பாலகர்கள் காட்சியளிக்கின்றனர். எல்லையம்மன் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரது வலது மேல் கையில் உடுக்கையும், இடது மேல் கையில் சூலமும் உள்ளன. மற்ற இரண்டு கைகளும் அச்சம் நீக்குதல் மற்றும் வரவழைத்தல் ஆகிய முத்திரைகளை காட்டுகின்றன. அம்மன் தனது வலது காலை மடித்து இடது காலை மகிஷன் தலைமீது வைத்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். பலிபீடம் பொதுவாக மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல், இங்கு கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர், கால பைரவர், சிவன், பார்வதி மற்றும் நவக்கிரகங்களின் சன்னதிகள் உள்ளன. கருவறையின் வெளிப்புறத்தில் வாராகி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோயிலின் தலவிருட்சம் வேப்பமரமாகும் கோயில் வளாகத்தில் ஒரு தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.
முக்கியமான திருவிழாக்கள்:
ஆடி திருவிழா:
இந்த கோயிலில் ஆடி மாதத்தில் நடைபெறும் பத்து நாட்கள் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்,
காப்பு கட்டுதல்:
திருவிழா தொடங்கும் முதல் நாள் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள்.
பால்குட ஊர்வலம்:
நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
அம்மன் வீதி உலா:
திருவிழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து வக்தர்களுக்கு அருள் புரிவார்.
தீமிதி திருவிழா:
ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
சித்திரை மாத பிரமோற்சவம்:
சித்திரை மாதத்தில் மூல நட்சத்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்ததை நினைவுபடுத்தும் வகையில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தெப்பர்சமும் நடைபெறும்.
மகா கும்பாபிஷேகம்:
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் மக கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும். இந்த விழாக்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பொங்கல் வைத்து படையல் இட்டு வேப்பிலையை உடலில் அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.
கோயில் சிறப்புகள்:
அம்மன்: இந்த கோயிலில் மூலவரான எல்லை அம்மன் மிகவும் முக்கியமான சத்தியாக கருதப்படுகிறாள். அம்மன் சிலை ஒரு ஊற்றிலிருந்து மேலெழுந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் அவளது உக்கிரம் தணிந்து பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பப்படுகிறது.
தனித்துவமான சிலை அமைப்பு:
எல்லையம்மன் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள் வலது மேல் கையில் உடுக்கையும் இடது மேற்கையில் சூலமும் உள்ளன மற்ற இரண்டு கரங்கள் அச்சம் நீக்குதல் மற்றும் வரவழைத்தல் ஆகிய முத்திரைகளை காட்டுகின்றன. அம்மன் தனது ஒரு காலை முடித்து மற்றொரு காலம் மகிஷாசுரனின் தலை மீது வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
ஆடி மாத தீமிதி திருவிழா:
ஆடி மாதத்தில் நடைபெறும் தீமிதி திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக தீ குண்டதில் இறங்கி நடப்பது ஒரு கண்கவர் நிகழ்வு. இந்த சடங்கு அம்மன் மீதான பக்தர்களின் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
நீரூற்று வரலாறு:
கோயிலின் கருவறைக்கு கீழே எப்போதும் ஒரு நீரூற்று இருக்கும் என்பது ஐதீகம். அம்மன் சிலை நீருற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் அம்மன் சிலைக்கு அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படுகிறது.
வேப்பிலை படையல்:
இங்கு பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு வேப்பிலையை உடலில் அணிந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென பிரார்த்தனை செய்வார்கள்.
தல பெருமைகள்:
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இந்த கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பல தலைமுறைகளாக இருந்து வரும் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் ஊத்துக்காடு எல்லையம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து, அவர்கள் வாழ்வில் அமைதியும் வளத்தையும் பெருக்குவதால் பல்லாண்டுகளாக மிக முக்கியமான ஆன்மீக மையமாக திகழ்கிறது.
வழிபாட்டு நேரம்:
காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 வரை மணி வரையிலும் இந்த கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது ஊத்துக்காடு அருள்மிகு எல்லையம்மன் கோயில் வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி பக்தர்களின் நம்பிக்கை அடையாளமாகவும் அருள் வழங்கும் தாயாகவும் விளங்குகிறது.
ஒரு நீர் ஊற்றிலிருந்து தானே வெளிப்பட்ட தெய்வீக வரலாறு அவளது உக்கிரமான சக்தி மற்றும் ஆடி மாத தீமிதி போன்ற தனித்துவமான திருவிழாக்கள் ஆகியவை இந்த கோயிலை மற்ற கோவில்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.
எல்லையம்மன் தனது எல்லைகளை காக்கும் தெய்வமாக மட்டுமல்லாமல் தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கி அவர்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் கருணை தாயாகும் திகழ்கிறாள். காலத்தால் அழியாத நம்பிக்கையின் சின்னமாக ஊத்துக்காடு அம்மன் கோயில் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து தமிழ்நாட்டின் ஆன்மீகப் பெருமைகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







