பச்சை குங்குமம் வைப்பதால் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள்

By Sakthi Raj Nov 06, 2024 05:41 AM GMT
Report

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப கஷ்டங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.அதில் இருந்து வெளியே வருவதை தாண்டி முதலில் அந்த சில பிரச்சனைகளுக்கு காரணம் நாமாக இருந்தாலும் கால சூழ்நிலையிலும் ஒரு காரணமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் மனம் பதட்டம் அடையாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி நிதானமாக யோசிக்கும்.இப்படியாகத்தான் நாம் நமக்கு உருவான பிரச்சனைகளை சரி செய்ய முடியம்.மேலும் என்னதான் நம்மிடம் அதிகபடியான தெம்பும் மன தைரியமும் இருந்தாலும் நம்மை மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டு இருக்கிறது.

அது தான் இறை சக்தி.அந்த இறை சக்தி தான் நம்மை பல சூழ்நிலையில் இருந்து பாதுகாத்து அருள்புரிவது.அப்படியாக நமக்கு ஏற்படும் துன்பத்தை தாயாக இருந்து கேட்டு அதற்கு நிரந்தர தீர்வு தருகிறாள் பச்சை அம்மன்.நாம் இப்பொழுது பச்சை அம்மன் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

பச்சை குங்குமம் வைப்பதால் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள் | Pachai Kunkumam Valipaadu

தாயை மிஞ்சிய சக்தி இல்லை போல் எதனை கடவுள்கள் இருந்தாலும் அம்மனை வழிபட மனதில் தனி தைரியமும் தெம்பும் பிறக்கும்.அப்படியாக ஒவ்வொரு ஊரிலும் அம்மன் வெவ்வேறு பெயர்கள் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறார்கள்.

நாம் பார்க்கும் அம்மன் பச்சை நிறத்தில் அருள்பாலிப்பதால் இந்த அம்மனுக்கு பச்சையம்மன் என்ற பெயர் வந்தது. இந்த அம்மனை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் பசுமையாக மாறும் என்று கூறப்படுகிறது.

சிலருக்கு என்னதான் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களின் நேர்மையான குணத்திற்கே அவர்களுக்கு எதிரிகள் தொல்லை ஏற்பட்டு விடும்.அவ்வாறு எதிரிகள் தொல்லை நீங்கவும்,கடன் பிரச்சினை தீரவும், திருமணம் நடைபெறவும் என்று நம் வாழ்க்கையில் எந்தெந்த பிரச்சனைகளுக்காக நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இந்த அம்மனின் வழிபாடு என்பது உகந்ததாகவே கருதப்படுகிறது.

எமன் சந்நிதி கொண்ட சிவன் கோயில்

எமன் சந்நிதி கொண்ட சிவன் கோயில்

தீராத கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இந்த பச்சையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும்.

முடிந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் பச்சையம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அவ்வாறு இந்த அம்மனின் ஆலயத்திற்கு நாம் செல்லும் பொழுது பச்சை குங்குமத்தை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

பச்சை குங்குமம் வைப்பதால் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள் | Pachai Kunkumam Valipaadu

அந்த குங்குமத்தை அம்மனின் திருப்பாதங்களில் வைத்து வழிபாடு செய்து நம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபர்களின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த குங்குமத்தை திரும்ப பெற்று கொண்டு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் வைக்க வேண்டும்.

இந்த பச்சை குங்குமத்தை சிவப்பு குங்குமத்திற்கு கீழ் தான் பெண்கள் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இரண்டு புருவங்களுக்கு நடுவிலும் இதை வைக்க வேண்டும்.

வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் குங்குமம் தருவது பலரது வழக்கமாக இருக்கும். அவ்வாறு குங்குமம் தரும் பொழுது இந்த பச்சை குங்குமத்தை தரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மனதார பச்சை அம்மனை வழிபாடு செய்து பச்சை குங்குமம் வைத்து கொள்ள வாழ்க்கையில் நல்லதோர் மாற்றங்களை நாம் பார்க்க முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US