பணத்தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த மந்திரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்ல துவங்கலாம்.
ஓம் தன பிரதாய நமஹ
என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்லுங்கள். அதிகபட்சம் உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
இது நம்முடைய பணத்தடைகளை நீக்கி பணவரவை அதிகரித்து கொடுக்கக் கூடிய அற்புதமான மந்திரம். அதே போல் துளசி இலையை நீங்கள் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கும் போது உங்களுடைய ஆரா சக்தி அதிகரித்து உடம்பில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
பணவரவை அதிகரிக்க பணத்தடையை நீக்க இந்த மந்திரமும் குளியல் முறையும் போதுமா? என்றால் நிச்சயமாக கிடையாது.
இது உங்களுடைய தடைகளை தகர்த்தெறியும். அதாவது இது வரை நீங்கள் எத்தனை முயற்சி செய்தும் வராத பணம் இனி நீங்கள் முயற்சி செய்தால் உடனே வரும்.
அடுத்தடுத்து நீங்கள் புதிய முயற்சிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.அதுமட்டுமின்றி சிந்தையும் செயலும் நேர்மறையாய் சிந்தித்து உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு இந்த பரிகார முறை கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது.
இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |