பலவிதமான நன்மைகளைக் கொண்ட பவளம்

By Sakthi Raj May 31, 2024 06:30 AM GMT
Report

‘கோரல்’ என்று சொல்லப்படும் பவளம் நல்ல ரத்த சிகப்பு நிறத்தில் இருக்கும். இது கடலுக்கடியிலே பவளப்பாறையிலிருந்து எடுக்கப்படுகிறது.

இந்த பவளம் கடல்வாழ் முதுகெழும்பற்ற உயிரினத்தை சேர்ந்தது. இதற்கு மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும். கடலில் விளையும் பவளங்களை பவளபூச்சி என்று சொல்கிறார்கள். இவை சிறிய உயிரினத்தால் உருவாவதாகும்.

பலவிதமான நன்மைகளைக் கொண்ட பவளம் | Pavalam Thali Nanmaigal Yaar Ellam Aniyalam News

இந்த பூச்சிகளின் எச்சம் பாறையின் மீது படிந்து பவளப்பாறை உருவாகிறது. உண்மையான பவளம் கிளி மூக்கு, செம்பருத்தி போன்ற நிறத்தை உடையதாக இருக்கும்.

வளங்கள் பிளவு பட்டோ, கரும்புள்ளி இருந்தாலோ, நிறம் மங்கி போனாலோ, துளைகளோடு இருந்தாலோ அதை பயன்படுத்த கூடாது.

பவளத்தை மாலையாகவும் போட்டு கொள்ளலாம்.

இன்றைய ராசி பலன்கள் (31.05.2024)

இன்றைய ராசி பலன்கள் (31.05.2024)


அப்படி அணியும்போது சரும பிரச்சனைகள் வராது. பவளத்தை அணியும் போது அதிகப்படியான தைரியத்தை கொடுக்கும். பவளத்தை மோதிரமாக அணியும் போது ராஜ யோகத்தை கொடுக்கும்.

இதை ஆள்காட்டி விரல் இல்லை மோதிர விரல் இந்த இரண்டு விரலில் தான் அணிய வேண்டும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருப்பின் பவளத்தை அணிந்தால் நல்ல அன்யோன்யம் உண்டாகும்.

பவளப்பொடியை சிலர் உணவில் சேர்த்து கூட சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் மனத்தெளிவை தரும்.

பலவிதமான நன்மைகளைக் கொண்ட பவளம் | Pavalam Thali Nanmaigal Yaar Ellam Aniyalam News

பவளங்களை பெண்கள் பயன்படுத்துவது மங்களகரமான விஷயங்களை வாழ்வில் ஏற்படுத்தும்.

வீட்டில் சுபகாரியம் நிகழும், தடைப்பட்ட காரியத்தை சரிசெய்து கொடுக்கும், தோஷ நிவர்த்தி, நெகட்டிவ்வான எண்ணங்களை சரி செய்யும்.

அதனாலேயே பெண்கள் பவளத்தை தாலியில் கோர்த்து அணிந்து கொள்வார்கள்.பழங்காலத்தில் பவளத்தை மணியாக கோர்த்து ருத்ராக்ஷத்துடன் அணிவார்கள்.

இது தீயசக்தியிடமிருந்து காத்துக்கொள்ள உதவும். பவளத்தை வெள்ளி அல்லது தங்கம் இரண்டிலேயுமே மோதிரமாக பயன்படுத்தலாம்.

செவ்வாயின் ஆதிக்கம் உள்ளவர்கள் பவளத்தை அதிகமாக பயன்படுத்தலாம். மேஷ ராசி, விருச்சிக ராசி ஆகிய ராசிகாரர்களுக்கு பவளம் ஏற்றதாக உள்ளது.

அவிட்ட நட்சத்திரம், சித்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பவளம் ஒத்துப்போகும். தீயணைப்பு துறை, காவல் துறை, வழக்கறிகர்கள், கட்டிடம் கட்டும் இஞ்சினியர்களும், ரத்த பரிசோதனை செய்பவர்களும், விளையாட்டு துறையில் இருப்பவர்களும் இந்த பவளத்தை அணிவது மேன்மையை தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US