இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜாவாகத்தான் இருப்பார்களாம்

By Sakthi Raj Apr 28, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த கணிதம் அடிப்படையில் ஒருவருடைய ஆளுமை குணாதிசயங்கள் இவையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களும் வாழ்க்கை நடைமுறையும் இருக்கும். காரணம் ஒவ்வொரு எண்ணிற்கும் பலம் மற்றும் பலவீனம் என்ற இரண்டு விஷயங்கள் உள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த நபர்கள் எப்பொழுதும் ராஜாவாக வாழ விரும்புவார்கள். இவர்கள் யாரிடமும் தன்மானத்தை விட்டுக்கொடுத்து அடிபணிந்து அடிமையாக செல்ல விரும்ப மாட்டார்கள். அந்த வகையில் எந்த தேதியில் பிறந்தவர்கள் ராஜாவாக வாழக்கூடிய யோகம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜாவாகத்தான் இருப்பார்களாம் | People Born In Number 6 Live Like King In Life

நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் குணம் இது தானாம்

நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் குணம் இது தானாம்

எண் 6:

இந்த எண்ணில் ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்களை சுற்றி எப்பொழுதும் சொகுசான வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களும் இருக்கும். இவர்கள் நேர்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள். அதோடு குடும்பத்தில் அன்புடனும் பாசத்துடனும் நடந்துக் கொள்வார்கள்.

இவர்களுக்கு இசை, கலை, நாட்டியம் போன்ற எல்லா விஷயங்களிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். எளிதாக யார் இவர்களிடம் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு உள்ளுணர்வு இருக்கும். இவர்கள் பணம் சம்பாதிப்பதும் கடினமாக உழைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜாவாகத்தான் இருப்பார்களாம் | People Born In Number 6 Live Like King In Life

மீனாட்சி அம்மனுக்கு ஏன் ஒவ்வொரு வருஷமும் பட்டாபிஷேகம் நடக்கிறது தெரியுமா?

மீனாட்சி அம்மனுக்கு ஏன் ஒவ்வொரு வருஷமும் பட்டாபிஷேகம் நடக்கிறது தெரியுமா?

அதே போல் இவர்களுக்கு சொத்து, லாட்டரி போன்றவற்றில் பண வரவுகள் கிடைக்கும். சமுதாயத்தில் இவர்களுக்கு என்று தனியான மரியாதைதையும் அந்தஸ்தையும் இவர்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள்.

இவர்கள் வேலை செய்யக்கூடிய இடங்களில் இவர்களுக்கு பெயர் புகழ் வந்து சேரும். அதேபோல் இவர்கள் பெயரை சொன்னால் அந்த ஊர்களில் இவரை பற்றி தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள்.

ஆனால் இவர்களுக்கு யாருக்கும் அடிமையாக வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள். "தானே ராஜா தானே மந்திரியாக" இவர்கள் வேலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள். அதேபோல் தான் இவர்களுக்கு வாழ்க்கை சூழலும் அமைந்து அதிர்ஷ்டம் கொடுக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US