இந்த 4 தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராதாம்

By Sakthi Raj Apr 14, 2026 11:41 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த எண் கணிதம் கொண்டும் நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை, குண நலன்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளும் முடியும். அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் பொருளாதார சிக்கலே வராதாம்? இவர்கள் சிறந்த ஆளுமை திறனுடன் திகழ்வார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர்கள் நல்ல தலைவராகவும் மக்களை வழிநடத்திச் செல்ல கூடியவர்களாகவும் இருப்பார்களாம். அவர்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். ஒருவர் பிறந்த தேதியில் உள்ள கூட்டுத்தொகையின் அடிப்படையில் எண் கணிதத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த 4 தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராதாம் | People Born This Number Attract Wealth And Success

2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள்

2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள்

அதாவது நீங்கள் பிறந்த தேதி 16 என்றால் அதைக் கூட்டும் பொழுது ஏழு என்கின்ற எண் வரும். அதை வைத்து நீங்கள் உங்களுடைய ஆளுமை பொருளாதார சூழ்நிலையை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக நீங்கள் 1, 10 19 அல்லது 28 ஆகிய தேவை பிறந்தவர்களாக இருந்தால் உங்களுடைய எண் ஒன்றாக இருக்கும்.

இந்த எண் சூரியனைக் குறிக்கக் கூடியதாக இருக்கிறது. அப்படியாக இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் வலுவான மற்றும் தனித்துவமான குணம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்நம்பிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இவர்களுடைய படைப்பாற்றல் மற்றும் திறமை எப்பொழுதும் சிறந்து விளங்கும்.

அது மட்டும் அல்லாமல் இவர்களுக்கு வாழ்க்கையில் பண பிரச்சனை என்பது எப்பொழுதும் இருக்காது. எந்த நேரமும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இந்த 4 தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராதாம் | People Born This Number Attract Wealth And Success

உங்களுக்கு இந்த 5 விஷயங்கள் கனவில் வந்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி..

உங்களுக்கு இந்த 5 விஷயங்கள் கனவில் வந்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி..

மேலும், இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே செயல்படுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் என்பது இவர்களுடைய கடின உழைப்பால் சோர்வின்றி வரக்கூடியதாகவே இருக்குமே தவிர சாதாரண விஷயங்களுக்கு இவர்கள் எப்பொழுது தங்களை வருத்திக் கொள்வதில்லை.

எந்த நேரத்திலும் இவர்கள் தங்களை புத்துணர்ச்சியாகவும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். நல்ல சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பின்பற்றுவதற்கு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதை போல் இவர்களிடம் ராஜதந்திரம் அதிகம் நிறைந்து இருக்கும்.

எதையும் அழகாக சிந்தித்து யோசித்து ஒரு சிறந்த ஆலோசனையை கொடுக்க கூடியவராக இருப்பார்கள். ஒரு சிலர் கலை, விளம்பரம், எழுத்து, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US