உங்களின் பெயரின் முதல் எழுத்து B என்று தொடங்குகிறதா ? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்

By Sakthi Raj Jul 22, 2025 02:44 PM GMT
Report

பொதுவாக, ஒவ்வொரு எண்ணிற்கும் எழுத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதேப்போல் ஒருவர் பெயர் தொடங்கும் முதல் எழுத்தை வைத்து அந்த நபரின் குணங்கள் சொல்லிவிடலாம். அந்த வகையில் ஒருவரின் முதல் எழுத்து B என்று தொடங்கினால் அவர்களின் குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.

"B" என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் மிகவும் எளிமையாக இருக்க விரும்புவார்கள். மேலும், இவர்களிடம் நாம் அதிகப்படியான பிடிவாதத்தை காணலாம். இவர்களை நம்பி விட்டால் அந்த நபருக்கு இவர்கள் கடைசி வரையில் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

இவர்கள் ஒருவர் கஷ்டம் அடைகிறார்கள் என்று தெரிந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன் வந்து உதவி செய்வார்கள். "B" என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு கலை, இசை, எழுத்து போன்ற துறைகளில் அதிக ஈடுபாடும் இருக்கும்.

உங்களின் பெயரின் முதல் எழுத்து B என்று தொடங்குகிறதா ? உங்கள் குணாதிசயங்கள் இதுதான் | Personality Of Person Name Starts With B In Tamil

இவர்கள் ஒரு விஷயம் செய்யும் முன் மிகவும் ஆராய்ந்து பெரியவர்களின் ஆலோசனைப் பெற்ற பிறகே செய்வார்கள். இவர்கள் ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அந்த வேலைக்கு முழு அர்ப்பணிப்பை கொடுப்பார்கள்.

இவர்கள் கடவுள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். "B" என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் தலைமைத்துவ வேலையில் தான் இருப்பார்கள்.

சிவன் கோயில் கட்டும் அதிர்ஷ்டம் உடைய ராசிகள் யார் தெரியுமா?

சிவன் கோயில் கட்டும் அதிர்ஷ்டம் உடைய ராசிகள் யார் தெரியுமா?

இவர்களுக்கு ஏற்ற தொழில் என்று எடுத்துக் கொண்டால் வணிக ஆலோசகர், தாவரவியலாளர், உயிரியல் நிபுணர், பிராண்ட் மேலாளர், வணிக மேம்பாட்டு மேலாளர், வணிக நுண்ணறிவு ஆய்வாளர், ஒளிபரப்பு தயாரிப்பாளர், வங்கியாளர், நடத்தை சிகிச்சையாளர், வணிக உரிமையாளர் அல்லது தொழில்முனைவோர், திவால்நிலை வழக்கறிஞர், உயிர் மருத்துவ விஞ்ஞானி, வணிக அமைப்புகள் ஆய்வாளர், பட்ஜெட் ஆய்வாளர், உயிர் வேதியியலாளர், ஒளிபரப்பு பத்திரிகையாளர், கட்டிட ஆய்வாளர், பேக்கர் அல்லது சமையல்காரர், வணிக செயல்பாட்டு மேலாளர், சிகை அலங்கார நிபுணர் போன்றவையாகும்.

இவர்கள் காதல் மற்றும் நட்புக்கு மிகவும் உண்மையாக இருக்க முயற்சிப்பவர்கள். பிரச்சனை என்றால் எந்த நேரமும் இவர்களை பயம் இல்லாமல் அழைத்து உதவி கேட்கலாம் கட்டாயம் முடிந்த உதவியை செய்வார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US