நாளை வானில் கருடனை தரிசித்தால் இத்தனை நன்மைகளா?

By Sakthi Raj Aug 08, 2024 01:00 PM GMT
Report

கருட பகவானை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.கருடனை வணங்கினால் நம்முடைய வேண்டுதல்களை பெருமாளிடம் நமக்காக எடுத்து கூறுவார் என்பது வரலாறு.

மேலும் நாளை கருட பஞ்சமி.அன்றைய நாளில் அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்.மேலும் கருட பஞ்சமியன்று காலையில் பெண்கள் கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நாளில் கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் வணங்கப்படுகிறது.மேலும் ஆடி மாதம் நிறைய சிறப்புக்கள் இருந்தாலும் எல்லோரும் மிக் அவசியம் இருக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று.

நாளை வானில் கருடனை தரிசித்தால் இத்தனை நன்மைகளா? | Perumal Karuda Panjami Naga Panjami Valipaadu

இந்த ஆண்டு கருட பஞ்சமி நாளை (9.8.2024) கொண்டாடப்படுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது.

மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி.

இந்த நாளில் கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

இந்த நாளில் பாம்பு உங்கள் கனவில் வருகிறதா? இது தான் காரணம்

இந்த நாளில் பாம்பு உங்கள் கனவில் வருகிறதா? இது தான் காரணம்

 

குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, வாரிசு கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் பநிறைய சுபகாரியங்கள் தொடங்கலாம்.அதாவது புதிய வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US