வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் என்ன நன்மையா? தீமையா?

By Sakthi Raj May 15, 2024 08:00 AM GMT
Report

வீட்டில் புறா, அணில், குருவி போன்றவை கூடு கட்டுவது இயல்பு தான். அந்த வகையில், பெரும்பாலானவர் வீடுகளில் புறா கூடு கட்டியிருக்கும். நாமும் அதைக் கண்டு பல முறை ரசித்திருப்போம்.

ஆனால், வாஸ்து முறைப்படி இது நல்லதா கெட்டதா என தெரிந்து கொள்வது அவசியம். இந்து மதத்தில் மரங்கள், செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் மங்கலகரமானவையாகக் கருதப்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்திலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதைப் பார்த்திருப்போம்.

வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் என்ன நன்மையா? தீமையா? | Pgeon Nest Hindu News Annmeegam Palangal Bhakthi

அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டட இடுக்குகள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தங்கள் கூடுகளைக் கட்டும். வீடுகளில் புறா கூடு கட்டுவது பண வருவாய்க்கான அறிகுறி என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஏன் இறைவழிபாடு அவசியம் ?

ஏன் இறைவழிபாடு அவசியம் ?


புறா, மகாலட்சுமிக்கு உகந்த பறவையாகக் கருதப்படுகிறது.

அதனால்தான் வீடுகளில் புறா கூடு கட்டுவது மங்கலகரமானது என கருதப்படுகிறது.

வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் என்ன நன்மையா? தீமையா? | Pgeon Nest Hindu News Annmeegam Palangal Bhakthi

அதேபோல், புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

எனவே, பறவையின் கூட்டை ஒருபோதும் கலைக்கக் கூடாது. அது, வீடு தேடி வரும் செல்வத்தை வேண்டாம் எனக் கூறுவதற்கு ஒப்பாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US