நீங்கள் பிறந்த தேதி இதுவா? நீங்கள் தான் உலகில் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படியாக எண் கணிதம் கொண்டு ஒருவருடைய வாழ்க்கையை நாம் கணித்து விடலாம். அந்த வகையில் இந்த தேதியில் பிறந்த நபர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் எல்லோரும் வியக்கத்தக்க அளவு வாழக்கூடிய நபராகவும் இருப்பார்களாம்.
அவர்கள் யார் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். எண் கணிதப்படி 23 என்ற தேதியில் பிறந்த நபர்கள் எப்பொழுதும் மிக பெரிய வளர்ச்சியை அடையக்கூடிய இடத்தில் இருப்பார்களாம்.
இவர்கள் மற்றவர்களை விட எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக யோசிக்க கூடிய திறனும், ஒரு விஷயத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அதை நோக்கி பயணிக்க கூடிய ஒரு மிகச்சிறந்த ஆற்றலும் இயற்கையாகவே இவர்களிடம் இருக்கும்.
அதேபோல் இவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்குமாம். மேலும், எல்லோரிடத்திலும் எளிதாக பழகக்கூடிய தன்மையும் எல்லோரையும் அனுசரித்து அழைத்து சொல்லும் பக்குவமும் இவர்களிடம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
அதோடு இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிக அளவிலான ஞாபக சக்தியும் அதிக அளவிலான திறமையும் இருப்பதால் இவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவதாக சொல்கிறார்கள். அதேபோல் இவர்கள் ஒரே நேரத்தில் பல வகையான விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு செய்வதற்கான திறனும் பெற்றவர்களாம்.
இவர்களுக்கு விளையாட்டு மற்றும் தொழில், பங்கு சந்தை, நிர்வாக திறன் போன்ற அனைத்து சிறப்பாக செய்யக்கூடிய திறன் இருக்குமாம். மேலும் இந்த எண் புதன் பகவானுடைய தொடர்பு இருப்பதால் இதில் பிறந்தவர்கள் அதிக அறிவாளியாகவும் எதையும் செய்யக்கூடிய நல்ல திறனும் இவர்களுக்கு அமைந்து பெரிய அளவில் வெற்றி காண்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







