மறந்தும் இந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யக்கூடாது
இறைவனுக்கு மலர்களை ஈடுபாட்டுடன், பக்தி சிரத்தையுடன் உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்தால் அவர் அகம் மகிழ்வார் என்பது உறுதி.
இறைவனின் அருளை இதன் மூலம் பெற்று வளம் பெறலாம். ஆனால், இப்படி நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில நியதிகள் உள்ளன.
சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.
அம்பிகைக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர் அறுகம்புல்
லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர் தும்பை மலர்
துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.
சூரியனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர் வில்வம்.
சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.
சரஸ்வதி தேவிக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர் பவள மலர்.
சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது.
பைரவரருக்கு அர்ச்சனை செய்யக் கூடாத மலர் மல்லிகை மலர் -பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |