அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர தினமும் வீடுகளில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பூமியில் இறப்பதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய அளவிற்கு நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். இதற்கு நாம் எவ்வளவுதான் கடினமான உழைப்பு உடல் ரீதியாக போட்டாலும் இறை சக்தி எனக்கூடிய அந்த அற்புதமான சக்தியின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்தால் மட்டுமே அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும்.
அப்படியாக, அஷ்ட ஐஸ்வர்யங்களும் நமக்கு வாழ்க்கையில் கிடைத்து எந்த ஒரு துன்பமும் இல்லாமல் வாழும் அளவிற்கு நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு எளிய பரிகாரம் இருக்கிறது. இந்த பரிகாரத்தை நாம் தினமும் செய்து விட்டோம் என்றால் நிச்சயம் இறை அருளால் மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
"ஓம் சிங்கரூபாய த்ரிநேத்ராய சக்கர ஹஸ்தாய விஷ்ணவே சுவாஹா"
விஷ்ணு பகவானுடைய இந்த எளிய மந்திரத்தை தினமும் நீங்கள் 18 முறை பாராயணம் செய்தாலே போதும் உங்களுடைய வாழ்க்கை மற்றும் தலை எழுத்து முற்றிலுமாக மாறிவிடும். அதைவிட மிக முக்கியமாக இந்த மந்திரத்தை எவர் ஒருவர் ஒரு லட்சம் முறை உச்சரித்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு விஷ்ணு பகவான் அவருடைய வாகனமான கருடனோடு நமக்கு காட்சியளிப்பார் என்று மகா மந்திர போதினி என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல் இந்த மந்திரத்தை ஒருவர் 15 லட்சம் முறை மேல் உச்சரித்து விட்டார்கள் என்றால் விஷ்ணு பகவானுடைய கருடாஸ்திரம் நமக்கு விஷ்ணு பகவானுடைய கைகளாலே கொடுக்கப்படும் என்று சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியாக, அதீத ஆற்றல் கொண்ட மந்திரங்களை ஒரே நாளில் லட்ச முறை சொல்வது என்பது இந்த வழிபாட்டிற்காகவே நம்மை ஈடுபடுத்தி செய்தால் மட்டுமே முடியும். அதனால் இந்த லட்சம் முறை என்பதை நம் தினமும் நம்மால் முடிந்த அளவிற்கு 18, 108, 1008 போன்ற எண்ணிக்கைகளில் சொல்லி வழிபாடு செய்யும்பொழுது கட்டாயமாக வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் படிப்படியாக விலகுவதைகாணலாம்.
முக்கியமாக துன்பம் வருகின்ற வேளையில் எதனால் எனக்கு இவ்வளவுதுன்பம் இன்று இறைவனை வெறுத்து ஒதுங்காமல் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த துன்பம் என்னை காப்பாற்றி இருக்கிறது என்று இறைவனுக்கு நன்றி சொல்லி இன்னும் அவனை நாம் நெருங்கி செல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் வாழ்க்கை வளமாக மாறும் இறைவனை நம் முழு மனதார உணர முடியும். இந்த பிரபஞ்சத்தில் நாம் எதையும் சாதிக்கக்கூடிய வலிமையும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |