மீன ராசியில் புதன் வக்கிர நிலை-தொழிலில் அதிரடி மாற்றத்தை பெற போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. புதன் ஒரு மனிதனின் புத்திசாலிதானம், மற்றும் பிறரிடம் நட்பு போன்ற விஷயங்களை சாதகமாக்கும் கிரகம் ஆகும். அப்படியாக, புதன் பகவான் ஒரு ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருக்கும் பொழுது அந்த ராசியினர் சுப பலன்களை பெறுகிறார்.
அதே போல், அமங்கலமான ஸ்தானத்தில் இருந்தால், சில ராசிகளுக்கு பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும். இந்நிலையில் புதன் பகவான் மார்ச் 15 2025 அன்று காலை 11.54 மணி மீன ராசியில் உக்கிரமாக மாறுகிறார்.
இந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் ஒரு சில தாக்கத்தை உண்டாக்கும். புதன் பகவானின் இந்த மீன ராசி பயணம் பிற்போக்கு நிலை அடைய போகிறார். புதனின் இந்த பின்னடைவு சில ராசிகளுக்கு சில யோகம் உண்டாகும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
புதன் பகவானின் பிற்போக்கு நிலையால் மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் மிக பெரிய செழிப்பை கொண்டு வர போகிறது. பூர்விக சொத்துக்கள் வழியாக சில ஆதாயம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வு எழுதுபவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
மேஷம்:
புதன் பகவான் பிற்போக்கு நிலையால் மேஷ ராசியினருக்கு நிதி நிலைமை மேம்படும். இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும். உங்கள் கனவுகள் எல்லாம் நினைவாகும்.
சிம்மம்:
புதன் பகவான் பிற்போக்கு நிலையால் சிம்மம் ராசியினருக்கு சொத்து தொடர்பான விஷயங்களில் உள்ள கஷ்டங்கள் விலகும். நீதி மன்ற வழக்குகளில் உங்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விலகி நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |