ராசி பலன்(16-06-2025)
மேஷம்:
எதிர்பாராத சந்திப்புகள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை கொடுக்கும். உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சகோதரன் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். நண்பர்கள் உதவியால் ஒரு சில முக்கியமான வேலையை முடிப்பீர்கள்.
மிதுனம்:
எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டாகும். சுயநலமாக சிந்திப்பதை தவிர்த்தால் நன்மை உண்டாகும். சகோதரன் சகோதிரி வழியில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
கடகம்:
இன்று மனதில் குழப்பங்கள் சூழ்ந்து இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சிக்கல் உண்டாகும். இறைவழிப்பாடு நன்மை தரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்:
பூர்விக சொத்து விஷயங்களில் சந்தித்த சிக்கல்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. சிறிது கவனமுடன் செயல்பட்டால் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் மந்தமாக காணப்படும் நிலை உண்டாகும். புதிய தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்:
இன்று உடல் நிலையில் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு இறைவழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம்:
கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் உங்களை விட்டு விலகி செல்வார்கள். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் நடக்கும்.
தனுசு:
மனதில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். தொழிலில் சந்தித்த நஷ்டங்களை சரி செய்வீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்:
திருமண வரன் தேடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு வேலையில் சில சிக்கல்கள் தோன்றி மறையும். முடிந்த வரை பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
பிறரிடம் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கைக்கு வரும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.
மீனம்:
இன்று உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நெருங்கிய உறவால் துரோகத்தை சந்திக்க நேரலாம். நட்பு வட்டாரம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |