அமாவாசை அன்று இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் கட்டாயம் இது நடக்குமாம்
பொதுவாக கனவு என்பது நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என்று சொன்னாலும் அவை பல நேரங்களில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது. சமயங்களில் அவை நம்மை கவனமாக இருக்க செய்யக்கூடிய ஒரு விழிப்புணர்வான கனவுகளாகவும், பல நேரங்களில் நம் கவலைகளுக்கு ஆறுதல் கொடுக்கக் கூடிய ஒரு கனவாகவும் அவை அமைவதை நாம் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் நமக்கு நெருக்கமானவர்கள் இறந்து அவர்கள் நம்முடைய கனவில் வந்தால் என்ன பலன்? அதிலும் குறிப்பாக அமாவாசை போன்ற நாட்களில் இறந்தவர்கள் நம்முடைய கனவில் தோன்றினால் அதற்கான பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

இந்து மதத்தில் அமாவாசை என்பது இறந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கக்கூடிய ஒரு முக்கியமான நாளாக இருக்கிறது. ஆக அந்த நாட்களில் இறந்த முன்னோர்கள் அல்லது இறந்த சொந்தங்கள் நம்முடைய கனவுகளில் வருகிறார்கள் என்றால் நமக்கான ஒரு செய்தியை அவர்கள் கொடுப்பதற்கான அறிகுறியே ஆகும்.
நம் குடும்பத்தில் அல்லது நமக்கு நெருக்கமானவர்கள் இறந்து நம்முடைய கனவில் வரும் பொழுது அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போல் அல்லது ஆசிர்வாதம் செய்வது போல் வந்தால் அவை நன்மையை குறைக்கிறது.
ஆனால் அவர்கள் அழுவது போன்று அல்லது மிகவும் சோகமான மனநிலையில் வருகிறார்கள் என்றால் அதற்கான பரிகாரத்தை நாம் அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக மகாளய பட்சம் போன்ற காலங்களில் முன்னோர்கள் நம்முடைய கனவுகளில் வரும் பொழுது அவர்களுடைய தேவையை அவர்கள் தெரிவிக்க வருவதின் அர்த்தமாக கருதப்படுகிறது.
மேலும், இந்த நாட்களில் வரக்கூடிய கனவு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆதலால் அவர்கள் நம்மிடம் என்ன செய்தி சொல்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் நாம் பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

அவ்வாறு கனவுகளில் நாம் இறந்த முன்னோர்களை காணும் பொழுது அவர்களுக்கு பிடித்த உணவை நாம் சமைத்து வழிபாடு செய்வது நன்மை அளிக்கும். மேலும் அழுவது போல் கனவு கண்டால் கட்டாயமாக குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று நாம் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
முக்கியமாக இறந்தவர்கள் கனவில் வரும் பொழுது நாம் பயம் கொள்ள தேவை இல்லை. அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்வதற்காக வருகிறார்கள். ஒன்று நமக்கு நன்மையான செய்தியாக இருக்கலாம்.
அல்லது நமக்கு நடக்கக்கூடிய ஒரு ஆபத்துகளில் இருந்து விலகுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரமாகவும் இருக்கலாம். ஆதலால் இறந்தவர்கள் நம்முடைய கனவில் வருகிறார்கள் என்றால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பரிகாரங்களும் பூஜைகளும் செய்து வழிபாடு செய்தால் கட்டாயமாக நன்மைகள் நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |