2026 மகாசிவராத்திரி: 12 ராசிகளும் சிவபெருமானின் அருள் பெற என்ன செய்யவேண்டும்
சிவபெருமானின் அருளைப் பெற மிக உகந்த நாளாக மகா சிவராத்திரி இருக்கிறது. இந்த 2026 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வரயிருக்கிறது.
இந்த நாளில் எல்லோரும் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று எந்த கோயிலுக்கு சென்று எப்படி வழிபாடு செய்தால் அவர்களுக்கு சிவபெருமானுடைய முழு அருள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் அல்லது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று இவர்கள் வழிபாடு செய்து "ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் சிதம்பரம், திருச்செங்கோடு, காளஹஸ்தி அல்லது அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். சிவபெருமானுக்கு மோர் அல்லது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கும்.
கடகம்:
கடக ராசியினர் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், திருக்கடையூர் ஆகிய திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். நீங்கள் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி கொடுக்கும் பொழுது மன அமைதி கிடைக்கும்.
சிம்மம்:
இவர்கள் திருவண்ணாமலை, சிதம்பரம் அல்லது அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயம் சென்று ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தும் சிவபெருமானுக்கு பாலில் சிவப்பு சந்தனம் கலந்த அபிஷேகம் செய்தால் நற்பலன்களை பெறலாம்.
கன்னி:
இவர்கள் ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சென்று அங்கு சுவாமிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்.

துலாம்:
இவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்று அல்லது சிதம்பரம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் நல்வாழ்வு கிடைக்கும். அதாவது நீண்ட தூர பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசித்தால் இவர்களுக்கு எல்லா பெருமையும் வந்து சேரும்.
விருச்சிகம்:
இவர்கள் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்யலாம். இவர்கள் சிவராத்திரி அன்று கோவிலை சுத்தம் செய்தல் பக்தர்களுக்கு நீர் வழங்குதல் போன்ற உழவாரப் பணிகளில் மேற்கொள்ளும் பொழுது முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு:
திருப்பரங்குன்றம் சிவன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் யாவும் விலகும்.
மகரம்:
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் அல்லது அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சில பாடல்கள் பாடியும் சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் சிறப்பை பெற்றுக் கொடுக்கும்.
கும்பம்:
இவர்கள் காலஹஸ்தி சிதம்பரம் கோயிலுக்கு சென்று சிவபெருமானை மனதில் நினைத்து மந்திரங்களை பாராயணம் செய்து சிவ பெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் துன்பங்கள் ஆகும்.
மீனம்:
வேலூர் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். அங்கு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல் கோவிலில் உழவாரப் பணிகளில் பங்கு பெறுதல் போன்ற விஷயங்கள் இவர்களுக்கு கேட்ட வரத்தை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |