ராகு தோஷம் விலகி உடனடியாக திருமணம் நடக்க செய்ய வேண்டிய 10 பரிகாரங்கள்
ஜாதகத்தில் ராகு கேது என்பவர் நிழல் கிரகமாக இருக்கிறார். இருப்பினும் இவர்களுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் ராகு தோஷம் இருக்கிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் செய்ய வேண்டிய 10 பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
ராகு தோஷம் உள்ளவர்கள் சுப நாட்களில் கோமேதக கல் தானம் செய்யலாம். அதேபோல், அவர்கள் உளுந்து தானம் செய்வதும் அவர்களுக்கு ராகு தோஷத்தை குறைத்து நல்ல அருள் பெற்றுக் கொடுக்கும். அதோடு, எண்ணெயுடன் பாத்திரம் தானம் செய்வது நல்ல நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும்.

இவர்கள் குடை தானம் செய்யலாம். முக்கியமாக மிகப்பெரிய அளவில் ராகு பாதிப்பு உள்ளவர்கள் மந்தாரை மலரால் ராகு பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது அதனுடைய வீரியம் குறையும். ராகு திசை நடப்பில் இருப்பவர்கள் கோமேத கல் அணிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இவர்கள் சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதால் இவர்களுடைய கர்ம பலன்கள் படிப்படியாக குறைவதோடு இவர்கள் துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபாடு செய்கின்ற பொழுது ராகுவால் ஏற்படுகின்ற பெரும் பாதிப்பு விலகும்.

குறிப்பாக வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் தேடி வரும். இவ்வாறு ஒன்பது வாரங்கள் தொடர்ந்து பரிகாரம் செய்து வரும் பொழுது அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் முற்றிலுமாக விலகி விரைவில் திருமணம் கைக்கூடி வருகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |