கும்ப ராசியினர் இந்த வாரத்தில் ஏற்படும் பண மழையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரியன் மிதுனத்திற்கு வரும் மாதமே ஆனி மாதம் ஆகும். வரும் ஜுலை 6ம் தேதி வரை கும்ப ராசியினருக்கான பலன்கள் இதோ.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கமாகும். இசை சில ராசியினருக்கு அசுப பலனையும், சில ராசியினருக்கு சுப பலனையும் கொடுக்கின்றது.
கும்பம் வார ராசி பலன்
கும்ப ராசியினருக்கு வயிறு தொடர்பான பிரச்சனை பிரச்சனையினை கவனம் எடுத்துக் கொள்ளவும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாவதுடன், நம்பிக்கையும், அனுகூலமும் ஏற்படும்.
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தொழில்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கக்கூடிய யோகமான காலகட்டமாக இருக்கும். மனதில் இருந்து வந்த பாரங்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
வியாபாரத்தில் எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். இதுவரை சந்தித்து வந்த அனைத்து பாதிப்புகளும், பிரச்சனைகளும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் திடீரென எடுக்கும் முடிவுகள் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
உத்தியோகம் சார்ந்த விஷயங்கள் மன மகிச்சியைத் தரும். இழுபறியாக இருந்த வந்த நிலைமைகள் மாறி, வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். மனம் மற்றும் தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும்.
பண வரவு அதிகரிக்கும்
பண வரவு பெரிய அளவில் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். அசையும், அசையா பொருள்களை சேர்த்து மகிழ்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வண்டி, வாகனங்களில் இருந்து வந்த குறைகள், பழுதுகளை சரிசெய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளைச் செய்யும் நல்ல காலகட்டம்.
வழிபாடு
சிவன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். திங்களூர் சந்திரன் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். நவக்கிரகங்களில் இருக்கக்கூடிய திங்கள் மற்றும் சந்திரன் வழிபாடு உங்களுடைய கஷ்டங்களையும், சங்கடங்களையும் தீர்க்க உதவும். பொருளாதாரத்தில் நல்ல மேன்மை ஏற்படும். வளர்ச்சியையும், மாற்றத்தையும் தரும் காலகட்டமாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |