21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா- தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா?
மனிதர்கள் என்பவர்கள் சமயங்களில் தெரியாமல் தவறு செய்து, அந்த தவறின் வழியாக பாடம் கற்றுக்கொண்டு, அந்தப் பாடத்தின் வழியாக மனம் தெளிந்து இறைவனை சரண் அடைவதற்கான பாதை பிறக்கிறது. அப்படியாக நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக அமாவாசை தினத்தன்று இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் 21 தலைமுறையினருடைய சாபம் விலக ஒரு முறை இந்த இடத்திற்கு சென்று தரிசனம் செய்தால் பகவானின் அருளால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்கிறார்கள். அந்த இடம் எங்கிருக்கிறது? அதில் இருக்கும் அற்புதங்களும் அதிசயங்களை பற்றியும் பார்ப்போம்.
இந்து மதத்தில் பகவான் விஷ்ணு பக்தர்கள் ஏதெனும் தவறு செய்து அவரை மண்டியிட்டு பகவானே தெரியாமல் செய்துவிட்டேன் நான் மீண்டும் இவ்வாறான ஒரு தவறை செய்ய மாட்டேன் என்று மனம் வருந்து கேட்டுக் கொண்டால் பகவான் அவர்களுக்கு தவறை மன்னித்து நல்வாழ்வை வழங்குவார்.
அப்படியாக பீஹார் மாநிலத்தில் உள்ள கயாவில் விஷ்ணு பகவான் பாதத்தில் பித்ருகளுக்கு பிண்டம் வைத்து வழிபட்டால் முன்னோர்கள் செய்த பாவம் அல்லது முன்னோர்கள் சாபம் அனைத்தும் நீங்கும் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் எல்லோராலும் பீகார் மாநிலத்தில் இருக்கக்கூடிய கயாவுக்கு செல்ல முடியாது.
ஆதலால் அவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்ய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பலமடங்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள். ஏனென்றால் இங்கு ருத்ரபாதம் உள்ளது.
இத்தலத்தின் வட ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தில், பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வழிபாடு செய்தால் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால் இத்தலம் ருத்ர கயா எனப்படுகிறது.
பீகாரில் உள்ள விஷ்ணு கயாவில் வழிபட்டால் 7 தலைமுறை பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் திருவெண்காட்டில் அமைந்துள்ள ருத்ர கயாவை வழிபட்டால் விஷ்ணு கயாவை விட மூன்று மடங்கு அதாவது நம்முடைய 21 தலைமுறை பெற்ற சாபங்களும் பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இங்கு பித்ருகளுக்கு தர்ப்பணம் பிண்டம் வைத்து வழிபாடு செய்ய அமாவாசை மிகச் சிறப்பான நாளாக இருக்கிறது. மேலும், இங்கு ஆண்டு முழுவதும் பிண்டம் கொடுத்து வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் சந்திர தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் உள்ள “ருத்ர பாதம்” என்ற இடத்தில் வரையப்பட்டுள்ள முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் உடனடியாக விலகுவதாக சொல்கிறார்கள்.
இக்கோயிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதாவது காசிக்கு நிகரான ஆறு தலங்களில் திருவெண்க்காடும் ஒன்றாகும். இவை நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய தலமாகும்.
மேலும் சிவபெருமானின் 64 மூர்த்திகளில் ஒன்றான அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தைத் தவிர வேறு எங்கு காண முடியாது. அதோடு பட்டினத்தார் சிவ தீட்சை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் ஒரு சிலருக்கு நான் ஏதோ ஒரு ஜென்மத்தில் பெரிய பாவம் செய்திருக்க்கூடும்.
அதன் பலனாக நான் இந்த ஜென்மத்தில் பல துன்பங்களை அனுபவிக்கின்றேன் என்று வருந்துபவர்கள் அவர்கள் துன்பம் விலக கட்டாயம் இங்கு வந்து இத்தலத்தில் வழிபாடு செய்ய அவர்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







