சனி பகவானின் அருளால் பணத்தில் திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
மகரம்
மகர ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார் இதனால் மகர ராசியில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் அதிகரிக்கக்கூடும்.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது
.நீண்ட நாளாக நிலுவையில் இருந்த பணமும் கையில் வந்து சேரும் .மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள். அனைத்து யோகம் இருந்தாலும் கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மிகப்பெரிய யோகம் காத்திருக்கிறது.
மிதுனம்
மிதுன ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்கிறார்.அதனால் 2025 வரை சனிபகவானுடைய அதிர்ஷ்டம் யோகம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப் போகின்றது .
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது .
இந்த அதிர்ஷ்டமான நேரத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
சிலருக்கு வெளிநாடு வெளியூர் பயணம் செய்து வேலை பார்க்கும் யோகம் வரும்.
கும்பம்
கும்ப ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.இதனால் கும்ப ராசிகள் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.2025 வரை நிதி நிலைமைகளில் பயமில்லாமல் செயல்படலாம்.
இருப்பினும் கடின உழைப்பு நல்ல பெயரையும் நல்ல பலன்களையும் பெற்று தரும்.திருமணமானவர்களுக்கு விரைவில் குழந்தையும், திருமணம் ஆகாதவர்கள் விரைவில் நல்ல வரணும் கை கூடி வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |