வெற்றியை தரும் சனிபகவான் வழிபாடு
சனிபகவான் என்றால் பயம் தான்.உண்மையில் சனிபகவான் கண்டு ஏன் பயப்படவேண்டும்?அவர் நம் வாழ்க்கைக்கு எப்பேர்ப்பட்ட மாற்றங்களை கொண்டு வருகிறார் என்பதை பற்றி பார்ப்போம்.
சனிபகவான் ஒரு நீதிமான்.அதாவது தர்மம் மீறி தவறு இழைக்க நினைக்கும் கூட்டத்திற்கு முடிவுரை எழுத வருகிறார் சனி பகவான் என்று தான் சொல்லவேண்டும்.
மேலும்,வாழ்க்கையில் தர்ம சிந்தனைகள் நியாயம் கடைபிடித்து வாழ்பவர்களை உச்சத்திற்கு அழைத்து செல்வார் சனி பகவான். பொதுவாக ஏழரை சனி, அஷ்டம சனி என்றாலே எல்லோருக்கும் ஒரு வித குழப்பம் பதட்டம் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
அந்த நேரத்தில் சனிபகவான் நம்மை வீழ்த்தி செயல்பட வரவில்லை அனுபவம் தந்து நல்வழி படுத்துவதே அவர் பெயர்ச்சி செய்கிறார். சனி திசை இவை நம் வாழ்க்கையில் வந்து செல்லும் பொழுது நல்ல மாற்றத்தை நாம் பார்க்க முடியும்.
இந்த சனி வந்து சென்ற பின் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் துணிச்சல், புதிய தெம்பு அளவிடமுடியாதது.அதை கொண்டு அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள்.
சனிபகவானை வணங்குபவர்களுக்கு கட்டாயம் ஒரு பயம் இருக்கும்.நமக்கு மேல் ஒரு தெய்வம் உண்டு,ஆதலால் அவர்கள் முடிந்த வரை நீதிக்கும் நேர்மைக்கும் போராடுவார்கள்.அவ்வாறு அவர்கள் வாழும் பொழுது சனி பகவான் வெற்றியே தருகிறார்.
நாம் வாழ்க்கையில் மனித நேயத்தோடு இருப்பது மிகவும் அவசியம்.அதாவது முடிந்த வரை மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு உதவி செய்வது மற்றும் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உதவி செய்தல் போன்ற விஷயங்களில் ஈடு படும் பொழுது சனி பகவான் மனம் மகிழ்ந்து நமக்கு நல்லாசி வழங்குகிறார்.
ஒரு மனிதனுக்கு அறவே இருக்க கூடாத எண்ணங்களில் போட்டி, பொறாமை, அகங்காரம், உச்சகட்ட தலைகணம், பழி உணர்ச்சி, கேடு எண்ணம் தான்.இவ்வாறு தீய எண்ணம் கொண்டவர்களுக்கு சனி தான் முக்கிய எதிரி.
நம்மிடம் தானம் செய்யும் அளவிற்கு வசதி இல்லாவிட்டாலும் தர்ம சிந்தனை கொண்டு சனி பகவானை மனதில் நிறுத்தி வணங்கினாலே சிறப்பு தான்.
இப்படி பல அனுபவங்கள் தந்து மனித வாழ்க்கையை நெறி படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவர் தான் சனி பகவான். ஆதலால் சனிபகவானை கண்டு யாரும் கலங்க வேண்டாம், எதற்கும் கலங்க வேண்டாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |