சந்திர கிரகணம் 2025: சனியின் அருளால் விபரீத ராஜ யோகம் பெரும் 4 ராசிகள்
மார்ச் 14 ஆம் தேதி ஹோலி தினத்தன்று சந்திர கிரகணம் உருவாக உள்ளது.சந்திர கிரகணம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மற்றும் அறிவியல் சாஸ்திரத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ஜோதிடத்தின் படி ராகுவும் கேதுவும் சந்திர கிரகணத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறார்கள்.ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின் படி கிரகணத்தை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில், ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்க முயற்சிக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படும் என்று சிலர் நம்புகிறார்கள். அறிவியல் பார்வையில், சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, அந்த நேரத்தில் சூரியனின் ஒளி பூமியின் மீது விழுகிறது.
ஆனால் சந்திரனின் மீது படுவதில்லை. இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.சந்திர கிரகணத்தின் போது, சனி பகவான் கும்ப ராசியில் இருப்பார்.சனி கும்ப ராசியில் தங்குவது சஷ யோகத்தை உருவாக்குகிறது.
அதன்படி சமித்ர கிரகணம் அன்று சனிதேவின் இந்த சேர்க்கை மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற யோகத்தை பெறப்போகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
நீண்ட நாட்களாக தள்ளி போன காரியம் நல்ல முடிவிற்கு வரும்.குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.வியரப்பரத்திலும் தொழிலும் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் விலகி செல்வார்கள்.
மிதுனம்:
அரசு பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.பொருளாதார ரீதியாக நல்ல மாற்றம் கிடைக்கும்.குடும்ப பிரச்சனை நல்ல முடிவு பெரும்.வெளிநாடு செல்ல வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
சிம்மம்:
இந்த காலகட்டத்தில் நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள்.தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.உங்கள் வாழ்க்கை துணையால் உண்டான கவலைகள் எல்லாம் முற்றிலுமாக விலகும்.வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம்:
உங்கள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.வருமானம் அதிகரிக்கும்.பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.எதையும் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பீர்கள்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |