சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 17, 2024 07:00 AM GMT
Report

சப்த கன்னிமார் என்று 7 கன்னிப் பெண்களை ஒரே இடத்தில் சேர்த்து வைத்து வழிபடும் முறை இந்தியா முழுக்க பல மாநிலங்களில் காணப்படுகின்றது. வடநாட்டில் இந்த ஏழு பேரை எட்டு பேராகக் கொண்டு அஷ்டமாத்திரிகா என்ற பெயரில் வழிபடுகின்றனர். நாட்டின் தென்கோடிப் பகுதியில் 7 கன்னிமார் என்ற பெயரில் ஒரே கல்லில் ஏழு பேரைச் செதுக்கி வைத்து அல்லது ஏழு பெண் உருவங்களை அடுத்தடுத்து வைத்து வழிபடும் பழக்கம் காணப்படுகின்றது.

சிவன் சந்நிதியில் சப்தமாதர்

வடக்கே இருந்து தெற்கே வந்த கன்னிமார் வழிபாடு சைவப் பேரெழுச்சி ஏற்பட்ட காலத்தில் சைவ சமயத்துடன் இணைந்து சிவபெருமான் சன்னதியின் உள் பிரகாரத்தில் ஏழு கன்னிமாரும் பரிவார தேவதைகளாக சேர்க்கப்பட்டனர். ஏழு கன்னிமாருக்கும் பொதுவாக பிராமி, இந்திராணி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஸ்வரி, வராஹி, சாமுண்டி ஆகிய பெயர்கள் வழங்கினாலும் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் ஊருக்கேற்ப காளியம்மா மாரியம்மா என்ற பெயர்களும் வழங்குகின்றன.

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி | Saptha Matha Names In Tamil

தமிழ் நாட்டில்

சில மாவட்டங்களில் முத்தியாலு அம்மா மூத்தவளாகவும் அவளுடன் பிறந்தவர்களாக பட்டாளம்மன், காளியம்மன், மாரியம்மன், மந்தை அம்மன், துர்க்கை அம்மன், சவுடம்மன் ஆகியோர் உள்ளனர். விழுப்புரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களில் பார்வதி, பட்டாத்தாள், அருந்தவம், பூவாள், காத்தாயி, பூங்காவனம், பச்சையம்மன் என்ற பெயரில் சப்த கன்னியரை வணங்குகின்றனர்.

வைதீக சமயத்தில் ஒரு பேரும் நாட்டுப்புறச் சமயத்தில் வேறு பெயரும் கொண்டு வணங்கப்பட்டாலும் ஏழு பேர் என்ற கணக்கு மட்டும். ஏழு பேரில் ஒருத்திக்கு மட்டுமே கதை உள்ளது. மற்ற ஆறு பேரையும் ஏழு என்ற எண்ணிக்கைக்காக சேர்த்தனர். 

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்


புராணங்களில் சப்தமாதர்

வைதீக சமயத்தில் சப்த மாதர் தோற்றம் குறித்து பல கதைகள் உண்டு . ஒன்று ,சிவன் அந்தகாசுரனுடன் போர் புரிந்த போது அவன் உடம்பிலிருந்து விழுந்த ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒரு அசுரனாக உருவெடுத்தது. அவன் ரத்த துளிகள் தரையில் விழக்கூடாது என்பதற்காக சிவன் யோகேஸ்வரியைத் தோற்றுவித்தார். யோகேஸ்வரி மகேஸ்வரி என்ற சக்தியைத் தோற்றுவித்தாள். மகேஸ்வரி தனக்குத் துணையாக சப்த மாதரை தோற்றுவித்தாள். இவர்கள் அசுரனை அழித்தனர்.

கதை 2, சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை அவர்களுடன் போர் தொடுத்த போது அம்பிகைக்குத் துணையாக சப்த மாதர்கள் வந்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி | Saptha Matha Names In Tamil

கதை 3, காளிதாசன் தான் எழுதிய குமார சம்பவம் என்ற காவியத்தில் சப்தமாதர்களை சிவனின் பணிப்பெண்களாக குறித்ள்ளார்.

கதை 4, மகிஷாசுரவதம் பற்றிய புராணத்தில் அவன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும் என்று வரம் கேட்ட காரணத்தினால், பார்வதி தேவி தன்னிலிருந்து சப்த கன்னியர்களைத் தோற்றுவித்து அவர்களை க் கொண்டு மகிஷாசுரனை அழித்ததாகக் கூறுகின்றது.

இன்னொரு கதையில் இவ்வாறு சப்த கன்னியர் மகிஷாசுரனை அழிக்கப் புறப்பட்டபோது சிவபெருமான் தன்னுடைய அம்சமான வீரபத்திரனையும் உடன் அனுப்பி வைத்தார் என்கின்றது. இவ்வாறாக சப்தமாதர் பற்றி பல கதைகள் வைதீக மரபில் புராணங்களில் காணப்படுகின்றன. 

வராகியின் வரலாறும் வழிபாடும்

வராகியின் வரலாறும் வழிபாடும்


 சப்தமாதர் ஜோடிகள்

வைதீக மரபினர் சப்த மாதருக்கு ஏழு கணவன்மாரைப் பிற்காலத்தில் சேர்த்தனர். பிராமிக்கு பிரம்மதேவன், இந்திராணிக்கு இந்திரன், மகேஸ்வரிக்கு ஈஸ்வரன் ,கவுமாரிக்கு குமரன், வைஷ்ணவிக்கு விஷ்ணு, வராகிக்கு பைரவர், சாமுண்டிக்கு ஈஸ்வரன், என்று ஆண் துணையை சேர்த்து வைத்தனர். 

சப்தமுனிகள்

வைதீக மரபைப் போல நாட்டுப்புறச் சமயத்திலும் ஏழு கன்னிமாருக்குப் பல கதைகள் ஊருக்கு ஒன்றாக உலவுகின்றது. மேலும் இச்சமய மரபிலும் ஏழு கன்னிமாருக்குத் துணையாக பூமாலை அப்பர், செம்மலை அப்பர், ராயப்பர், கருப்பையா, முத்தையா, போன்றவர்களைக் காவலுக்கு வைத்தனர்.

இன்னும் சில இடங்களில் செம்முனி, வாழ் முனி, முத்து முனி, வேதமுனி, பூ முனி, பாலக்காட்டு முனி, வேத முனி, லாட முனி போன்ற முனிகளைக் காவலாக வைத்தனர். இவர்களை சப்த முனிகள் என்றும் அழைத்தனர்.

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி | Saptha Matha Names In Tamil

நாட்டுப்புறக் கதை

ஏழு கன்னிமார் கதைகளும் ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறாக உள்ளன. புராணக் கதை வேறு. புழக்கத்தில் இருக்கும் கதைகள் வேறு. ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழு கன்னிமார் தங்களுக்குப் பண வசதி இல்லாததால் நல்ல கணவன்மார் கிடைக்காது என்று எண்ணி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

அவர்களின் பக்தியைச் சோதிக்க வந்த சிவபெருமான் ஓர் இளைஞனாக அவர்கள் முன் தோன்றி ஏழு பேரையும் கவர முயன்றார். ஆறு பேர் வெவ்வேறு திசையில் தப்பி ஓடிவிட காத்தாயி மட்டும் சிக்கிக் கொண்டாள். 

சிதறி ஓடிய ஆறு பேரும் ஓராண்டு கழித்து ஓரிடத்தில் கூடினர். அப்போது காத்தாயி கையில் ஒரு குழந்தையுடன் அங்கு வந்தாள். 'குழந்தை ஏது' என்று சகோதரிகள் கேட்டதற்கு 'அன்று வந்த இளைஞன் என்னைக் கவர்ந்து சென்று விட்டான். அவனுக்குப் பிறந்த குழந்தை இது' என்றாள்.

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்


இதை மற்ற சகோதரிகள் நம்பவில்லை. 'நீங்கள் நம்ப வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்' என்றாள். 'தீ வளர்த்து உன் குழந்தையோடு உள்ளே குதி. செத்தால் நீ சொன்னது பொய் பிழைத்தால் நீ சொன்னது உண்மை என்று நம்புவோம்' என்றனர்.

அதுபோல தீ வளர்த்து அவள் குதிக்கப் போகும் வேளையில் சிவபெருமான் காட்சி அருளி அவளை தன் மனைவி என்று கூறி ஏற்றுக் கொண்டார். ஆறு பெண்களையும் ஆறு ஊர்களில் காவல் தெய்வமாக இருக்கும்படி கட்டளையிட்டார். இவ்வாறாக ஏழு கன்னிமாருக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதை நிலவுகின்றது.  

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி | Saptha Matha Names In Tamil

பௌத்தமும் சப்தமாதரும்

ஏழு கன்னிமார் தெய்வ வழிபாடு இந்து சமயத்தில் மட்டுமல்லாது பௌத்த சமயத்திலும் தீவிரமாக பின்பற்றப்பட்டுள்ளது. பௌத்தர்கள் மூலமாகவே கன்னிமார் வழிபாடு தென்னாட்டுக்கு அறிமுகமாயிற்று. தென்பகுதியில் பௌத்த சமயம் பரவி இருந்த ஊர்களில் கன்னிமார் வழிபாடு மிகுந்த செல்வாக்குடன் காணப்பட்டது. கிராமங்களில் பச்சையம்மன் என் வணங்கப்பட்ட பச்சை தாரா தேவி வழிபாட்டுடன் கன்னிமார் வழிபாட்டையும் மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டனர் 

வழிபாட்டின் பலன்

கன்னிமார் காவல் தெய்வமாக விளங்கினர். நாற்சந்தியில், சாலைகளில் கன்னிமார்களுக்கு கற்சிலைகள் வைக்கப்பட்டன. சாலையில் செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பவர்கள் ஏழு கன்னிமார். குழந்தை பெற்றால் முதல் காணிக்கை கன்னிமாருக்கு கொடுக்கப்பட்டது. குழந்தை நலம் காப்பவர்கள் கன்னிமார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

தொடக்கத்தில் சப்த கன்னிமார் சிலைகள் ஊருக்குள் இல்லாமல் தெருக்களில் சந்திகளில் முச்சந்தி நார்ச்சந்திகளில் வைக்கப்பட்டன குழந்தை நலம் வேண்டுபவரும் பயணம் சிறக்க வேண்டும் என்று நினைப்போரும் சப்த கன்னிமார் துதிகளை சொல்லி வரலாம். 

தினமும் காலை மாலை மதியம் என்ற மூன்று பொழுதும் இரண்டு முறை கீழ்க்காணும் துதியை சொல்லி சப்தமாதரை மனதில் தியானித்து வணங்குவோருக்கு குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அறிவு நுட்பத்துடனும் இருப்பார்கள். அவர்களின் பயணங்களில் எவ்வித இடையூறும் நேரிடாது. பயணத்தின் நோக்கம் வெற்றிகரமாக அமையும்.

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி | Saptha Matha Names In Tamil

ஓம் பட்டாரிகாம்மா போற்றி

ஓம் தேவ கன்னியா போற்றி

ஓம் பத்மகன்யா போற்றி

ஓம் சிந்து கன்யா போற்றி

ஓம் வன கன்யா போற்றி 5

ஓம் சுகச கன்யா போற்றி

ஓம் சுமதி கன்யா போற்றி

ஓம் பார்வதி போற்றி

ஓம் பட்டாத்தாள் போற்றி

ஓம் அருந்தவம் போற்றி 10

ஓம் பூவாள் போற்றி

ஓம் பச்சையம்மா போற்றி

ஓம் காத்தாயி போற்றி

ஓம் பூங்காவனம் போற்றி

ஓம் பிராமி போற்றி 15

ஓம் மகேஸ்வரி போற்றி

ஓம் கவுமாரி போற்றி

ஓம் இந்திராணி போற்றி

ஓம் நரசிம்மி போற்றி

ஓம் வராகி போற்றி 20

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்


ஓம் வைஷ்ணவி போற்றி

ஓம் சாமுண்டி போற்றி

ஓம் முத்தாலம்மா போற்றி

ஓம் பெரியநாயகி போற்றி

ஓம் பச்சநாச்சி போற்றி 25

ஓம் முன்னுதித்த நங்கை போற்றி

ஓம் சவுடம்மா போற்றி

ஓம் சக்கர மங்கை போற்றி

ஓம் அரியமங்கை போற்றி

ஓம் அலங்காரவல்லி போற்றி 30

ஓம் அகிலாண்டேஸ்வரி போற்றி

ஓம் பால்வள நாயகி போற்றி

ஓம் தாழமங்கை போற்றி

ஓம் திருப்புள்ள மங்கை போற்றி

ஓம் ஏழு கன்னிமார் போற்றி 35

ஓம் பச்சையம்மா போற்றி

ஓம் மறலி அம்மன் போற்றி

ஓம் பூங்காவனம் போற்றி

ஓம் வெள்ளிப்புலியூரம்மன் போற்றி

ஓம் செம்மலையப்பர் தேவி போற்றி 40

முருகன் வரலாறும் வழிபாடும் -1

முருகன் வரலாறும் வழிபாடும் -1


ஓம் முத்தையப்பர் தேவி போற்றி

ஓம் ராயப்பர் தேவி போற்றி

ஓம் கருப்பையா தேவி போற்றி

ஓம் யோகேஸ்வரி போற்றி

ஓம் மகேஸ்வரிய போற்றி 45

ஓம் முத்தியாலு அம்மா போற்றி

ஓம் பட்டாளம்மா போற்றி

ஓம் காளியம்மா போற்றி

ஓம் மாரியம்மா போற்றி

ஓம் மந்தையம்மா போற்றி 50

ஓம் நாற்சந்தி நாயகியர் போற்றி

ஓம் தெருக்காவல் தேவியர் போற்றி

ஓம் வழித் துணை மாதர் போற்றி

ஓம் சேய் நலத் தேவியர் போற்றி 54 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.














+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US