பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன

By Sakthi Raj Jul 06, 2026 06:02 AM GMT
Report

இந்த உலகத்தில் கனவு என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகும். சில நேரங்களில் அவை அந்த நாளில் நாம் பேசிய விஷயங்கள் பார்த்த விஷயங்கள் கனவில் வரலாம். ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அவர்களுக்கு சில அறிகுறியாக காட்டும் விதமாக கனவுகள் வரலாம்.

அப்படியாக, கனவுகளில் பாம்பு வந்தாலும் பாம்பு கடித்தது போல் வந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் என்ன நடக்கும்? சாஸ்திரம் சொல்வது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு பாம்பு கனவில் வருகிறது என்றால் அவர்கள் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக சொல்லப்படுகிறது. குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து அவர்களை வழிபாடு செய்யச் சொல்வதாக நம்பப்படுகிறது.

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன | Sasthiram Behind Snake Bitting In Dream

எந்த ராசிக்காரர்கள் யாருடைய பேச்சை கேட்கவே மாட்டார்கள் தெரியுமா?

எந்த ராசிக்காரர்கள் யாருடைய பேச்சை கேட்கவே மாட்டார்கள் தெரியுமா?

குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வேண்டி இருப்பார்கள். அது காலதாமதம் ஆகிறது என்றால் இவ்வாறு கனவுகள் வருவதை நாம் பார்க்கலாம். அதைப்போல், சிலருக்கு பாம்பு கடிப்பது போல் வருகிறது என்றால் அதற்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதில் பாம்பு உங்கள் கால் அல்லது கையை கடிப்பது போல் வந்தால் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான காலகட்டங்களில் நாம் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதைப்போல், பாம்பு உங்களை ஒரு கனவில் கடித்து நீங்கள் உயிர் பிழைப்பது போல் வந்தால் அது நல்ல அறிகுறியாகும். அது உங்களுக்கு வர இருக்கின்ற தீய விளைவுகளை தடுத்து நற்பலன்களை கொடுக்கக்கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன | Sasthiram Behind Snake Bitting In Dream

12 ராசிகளில் யார் அதிகமான சோம்பேறித்தனம் கொண்டவர்கள் என்று தெரியுமா?

12 ராசிகளில் யார் அதிகமான சோம்பேறித்தனம் கொண்டவர்கள் என்று தெரியுமா?

அதைப்போல் ஒருவருக்கு ராகு கேது தோஷம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு கருநாகம் பாம்பு கனவில் வருவதை நாம் காணலாம். இவ்வாறு வருகின்ற பொழுது நீங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் வாழ்க்கையில் கவனம் கொள்ள வேண்டும், பொருளாதாரத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும்.

ஆக,ஒருவருக்கு பாம்பு கனவில் வருகிறது என்றால் கவலை கொள்ளாமல் அந்த கனவை பற்றி மறுநாள் அதிகளவில் ஆராய்ச்சி செய்யாமல் அருகில் இருக்கக்கூடிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நமக்கு சிறந்த பலன் கொடுக்கும். எப்பேர்பட்ட தீய பலன்கள் வர இருந்தாலும் இறை வழிபாடு அதை ஒன்றும் இல்லாமல் ஆக்கக்கூடிய வல்லமை பெற்றது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US