தனுசுக்கு செல்லும் செவ்வாய் - 40 நாட்கள் இந்த ராசிகளுக்கு நரகம்தான்
செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகிறார், இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் பிரதிபலிக்கும். டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து குருபகவான்
ஆளும் தனுசு ராசிக்கு இடம்பெயர்வது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ரிஷபம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். தொழிலில் லாபமும், முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி இருக்காது. பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
தொழிலில் அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும். நிதி முன்னேற்றத்தை அடைய கடினமாக போராட வேண்டியிருக்கும். பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி
குடும்ப சண்டைகள் மற்றும் வேலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம், இது உங்களின் மனஅமைதியை சீர்குலைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

வேலையில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க தயாராக வேண்டும். அலுவலக சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
அன்றாட வாழ்க்கையிலும், உறவுகளிலும் எதிர்பாராத சவால்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகலாம், இது மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம். எதிர்பாராத செலவுகள் சேமிப்பைப் பாதிக்கலாம்.
கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளலாம். உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவற்றைத் தீர்க்க பொறுமை மற்றும் சரியான உரையாடல்கள் தேவை.