ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நல்ல காலம் எப்பொழுது துவங்கும் தெரியுமா?
மனிதர்கள் வாழ்க்கையே கனவுகளாலும் ஆசைகளாலும் நிறைந்தவையாக இருக்கிறது. அப்படியாக எல்லோருக்கும் வீடு கட்ட வேண்டும், தொழில் துவங்க வேண்டும், என்று பல்வேறு ஆசைகள் இருக்கும். ஆனால், அவர்கள் நினைத்த காரியத்தை துவங்கும் பொழுது தடைகள் வந்துவிடும். கைகளில் பணம் இருக்கும்.
ஆனால் அதைக் கொண்டு முதலீடு செய்ய முடியாது. ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பத்திரம் முடியும் நேரத்தில் ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடும். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அதற்கான தடை வந்து கொண்டே இருக்கும்.
அப்படியாக எந்த ஒரு காரியம் துவங்க வேண்டும் என்றாலும் கைகளில் பணம் செல்வாக்கு இருந்தாலும் நிச்சயம் அதற்குரிய நல்ல நேரம் வரவேண்டும் என்பது பல நேரங்களில் முக்கியமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் ஒருவருக்கு நல்ல காலம் எப்பொழுது தொடங்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஜோதிடத்தில் சுப கிரகமாக இருக்கக்கூடியவர் குரு பகவான். மேலும், குரு பார்வை கோடி நன்மை என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக, ஜாதகத்தில் கோச்சார கிரகங்கள் மற்றும் லக்னத்தை கொண்டு கணிக்க கூடிய தசா புத்திகள், ஜாதகத்தில் இடம்பெற்று இருக்கக்கூடிய கிரகங்கள் இதை வைத்து தான் நாம் ஒருவருக்கு நல்ல காலம் எப்பொழுது பிறக்கும் மற்றும் வாழ்க்கை ரீதியாக எந்த நேரங்களில் என்ன மாதிரியான நன்மை தீமைகளை அவர்கள் சந்திப்பார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.
அப்படியாக ஒருவர் ஜென்ம ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது குரு 5, 7, 9 ஆகிய இடங்களில் அமர்ந்திருக்கிறார் என்றால் நிச்சயம் அப்பொழுது உங்களுக்கு நல்ல காலம் துவங்குகிறது என்பதின் அறிகுறியாகும்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் அந்த நேரத்தில் என்ன காரியம் செய்தாலும் சுபமாக முடியும். அதோடு நல்ல விஷயங்களும் அவர்களுக்கு அந்த காலகட்டங்களில் தேடி வரும் செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |