வாஸ்து குறிப்புகளில் காணப்படும் குறைபாடுகள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
உப்பு
சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்புடைய ஒரு பொருள் உப்பு. அந்த வகையில் உப்பு கீழே விழுவது சுக்கிரன் மற்றும் சந்திரனை அவமதிப்பதற்கு சமம். நெருக்கடி, செலவுகள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மை குறிக்கும்.

வீட்டில் காணப்படும் மன அமைதியை போக்கும் ஒரு விஷயமாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த வாஸ்து குறைபாடுகளை தீர்க்க, உப்பை தானம் செய்வது நல்லது. சுத்தமான உப்பினை தானமாக அளிப்பது அவசியம். மேலும், தானமாக அளிக்கும் உப்பை உங்கள் கையில் இருந்து கொடுப்பது கூடாது.
உப்பை தானமாக அளிக்கையில், அந்த உப்பை ஒரு மேஜையில் வைத்து எடுத்துக்கொள்ள கூறுங்கள். அல்லது, ஒரு தட்டில் வைத்து தானம் பெறும் நபருக்கு அளித்திடுங்கள். அதேப்போன்று தானமாக அளிக்கும் உப்பு கல் உப்பாக இருப்பது நல்லது.
வாஸ்து குறிப்பு
சமைக்கும் பொருட்கள் அல்லது சமைத்து முடித்து எடுத்து வைத்த உணவு பொருட்கள் உங்கள் கையில் இருந்து நழுவி விழுவதும் ஒரு வாஸ்து குறைபாடாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வர விருக்கும் பிரச்சனைகளை குறிக்கும்.
இந்த வாஸ்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவில் சென்று, அங்கு வரும் பக்தர்களுக்கு உணவை பிரசாதமாக அளிக்கலாம்.