உங்கள் வீடுகளில் இரவு இந்த சத்தம் கேட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
ஆன்மீக ரீதியாக நம்மை சுற்றி நடக்கும் சில விஷயங்கள் நம்மை சுற்றி எப்பொழுதும் தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் வீடுகளில் இரவு நேரங்களில் இந்த சத்தங்கள் கேட்டால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இரவில் வீட்டில் சங்கு சத்தம் கேட்டால் சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக எப்பொழுதும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அதுவே இரவில் கொலுசு சத்தம் கேட்கிறது என்றால் நம்முடைய வீட்டை சுற்றி தெய்வ நடமாட்டம் மற்றும் குலதெய்வம் அருள் நமக்கு எப்பொழுதும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கோவில் மணி சத்தம் இரவில் கேட்கிறது என்றால் நமக்கு அதிர்ஷ்டம் நெருங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு சில நேரங்களில் நாம் திடீர் என்று விபூதி மற்றும் சந்தனம் போன்ற நறுமணங்களை உணர முடியும்.
அந்த நறுமணமும் நமக்கு தெய்வீக ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |