பலரும் அறிந்திடாத திருநெல்வேலியின் மிகப் பழமையான ஆலயம்
திருநெல்வேலி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் தான். ஆனால் நெல்லையப்பர் கோவிலை விடவும் மிகப் பழமையான லட்சுமி நரசிம்மர் ஆலயம் திருநெல்வேலியில் மேல மாட வீதியில் பலரும் அறிந்திடாத மற்றும் திருநெல்வேலியில் இருக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இருக்கிறது.
பெருமாளின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தான் தன்னுடைய பக்தனுக்காக ஒரே நாளில் தோன்றி மறைந்த அவதாரமாகும். அதாவது பெருமாள் தன்னுடைய பக்தர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் எந்த ரூபத்திலும் அவதாரம் எடுத்து அவர்களை காப்பாற்றுவார் என்பதற்கு ஒரு சான்றாக தூணில் இருந்து அவதரித்து தன்னுடைய பக்தரை காப்பாற்றினார்.
மேலும் எவர் ஒருவர் இந்த அவதார நரசிம்மரை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கிறது. அதோடு அவர்களுக்கு எதிரிகள் தொல்லை இருப்பதில்லை. அப்படியாக தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த நரசிம்மர் மிகவும் உக்கிரமாக இருந்தார்.
அவரை சாந்தப்படுத்துவதற்காக நரசிம்மரின் மடியில் அமர்ந்து லட்சுமி தேவி அவருடைய கோபத்தை தணித்தார். அவ்வாறாக நாம் நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தபடி இருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை தான் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் இங்கு பெருமாள் இடதுமடியில் அமர்ந்த மகாலட்சுமி பெருமாளின் தோளில் கை போட்டபடி இருப்பதை இந்த கோவிலில் மட்டும் தான் காணமுடிகிறது. இங்கு மகாலட்சுமி தாயார் கைகளில் தாமரை மலர் இருக்கிறது. அதோடு மகாலட்சுமி பெருமாளை நோக்கி தனது பார்வையை திருப்பி இருக்கிறாள்.
அதாவது தன்னுடைய பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை விடாமல் பெருமாளுக்கு அம்பாள் தெரிவித்து கொண்டு இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் வைத்த கண்ணை திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். மேலும் இங்குள்ள பெருமாளை நரசிம்மர் என்று அழைக்கப்பட்டாலும் அவருக்கு சிங்கமுகம் கிடையாது. மேலும் இந்த நரசிம்மரை "பிரகலாத வரதன்" என அழைப்பது வழக்கம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும். அதாவது நெல்லைக்கு பெருமை சேர்க்கும் காந்திமதி அம்மன் எட்டாம் நூற்றாண்டில் மன்னரால் கட்டப்பட்டது.
ஆனால் காந்திமதி அம்பிகை கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கும் முன்னதாகவே இந்த நரசிம்ம பெருமானின் திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளது. அதோடு இந்த லட்சுமி நரசிம்மர் சன்னதியும் நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரே மட்டத்தில் இருந்திருக்கிறது. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் போன்றும் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. அதை வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் இதை மீண்டும் கண்டுபிடித்துஇருக்கிறார். அவர் இந்த நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை தொடர்ந்து பல வைணவ பக்தர்கள் இக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவை உடனடியாக நடப்பதாக பல பக்தர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அதிசயத்தின் அடிப்படையில் நமக்கு தெரிவிக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையில் தவிப்பவர்கள், நீதிமன்ற வழக்கு பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் போன்றவை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் ஒரு முறை இந்த லட்சுமி நரசிம்மரை வந்து வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் இவரை தரிசித்த மறுநாள் முதல் ஒரு மிகப்பெரிய மாறுதல்களை காண முடியும்.
நேர்த்திக்கடன்:
இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மருக்கு நிராஞ்சன தீபம் ஏற்றும் வகையில் பக்தர்கள் அரிசி தேங்காய் நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர். ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்று வேண்டும். இதனால் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் மற்றும் திருமண தடைகள் இருந்தால் அவை விலகுவதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







