சுக்கிரன் பெயர்ச்சியால் மிக பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசிகள்
இந்த 2025 மார்ச் மாதம் முதல் தொடங்கி கிரகங்களில் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது.அதாவது சுக்கிரன் செல்வம், அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்திற்கு உரிய கிரகம் ஆகும்.அந்த வகையில் மார்ச் 2ஆம் தேதி முதல் மீன ராசியில் வக்ரகதியில் பயணிக்க உள்ளார்.
இந்த வக்ர பெயர்ச்சி சுமார் 90 நாட்கள் நீடிக்கும். சுக்கிரன் மார்ச் 2 ஆம் தேதி காலை 6:04 மணிக்கு வக்ரகதியில் பயணிக்க தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி நேர்கதியில் திரும்புவார்.ஜோதிடத்தில் சுக்கிரனின் இந்த வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கொடுக்கும்.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் சந்திக்க போகிறார்கள்.தொழில் உங்களுக்கு சாதகமாக அமைய போகிறது.எதையும் நிதானமாக பொறுமையாக யோசித்து செயல்படுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி நிதி நிலையில் நல்ல மாற்றம் கொடுக்கப்போகிறது.உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.உங்களுக்கு தொழில் நல்ல ஆதரவு கிடைக்கும்.சிலருக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு முழுமையாக செல்வார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் குடும்ப பிரச்சனைகள் விலகும்.உங்கள் உழைப்பிற்கு ஏற்ப பலன் கிடைக்கும்.புதிய வண்டி வாகனம் யோகம் உண்டாகும்.ஆடம்பர வாழ்க்கை அமையும்.புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |