சுக்கிர பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகிறது?

By Sakthi Raj May 30, 2025 12:23 PM GMT
Report

 இந்த சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசியில் வருகின்ற மே 31ஆம் தேதி 2025 அன்று நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சியால் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல மாற்றத்தை பெறுவார்கள். அப்படியாக, 12 ராசிகளுக்கும் இந்த சுக்கிரன் பெயர்ச்சி எவ்வாறு அமையப்போகிறது என்று பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் கேது எங்கு இருக்கிறார்? வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் கேது எங்கு இருக்கிறார்? வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்

மேஷம்:

இவர்களுக்கு சேமிப்பதில் சில சிக்கல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் எதிலும் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் சில போராட்டங்களை சந்திக்கக்கூடிய நேரமாகும். கண் எரிச்சல் போன்ற உபாதைகள் வரலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு வேலை தொடர்பான விஷயங்களில் சில சிக்கல் உண்டாகலாம். வாழ்க்கை துணையுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்னும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு பேச்சுகளில் கவனம் தேவை. படிப்பிற்காக வெளியூர் செல்ல நேரலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு மனைவியுடன் நல்ல புரிதல் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வதால் வெற்றி பெறலாம். வேலை மாற்றம் இடம் மாற்றத்திற்கு வாய்ப்புகள் உண்டு. உடலில் ஏற்பட்ட சத்து குறைபாடுகள் நல்ல முன்னேற்றம் பெரும். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை தோன்றும்.

கடகம்:

இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியாக சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிலையான வருமானம் கிடைப்பதில் தடை உண்டாகும். கணவன் வழியே சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். மன அழுத்தம் உடல் சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் உள்ள சுக்கிரன் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான காலகட்டத்தைக் குறிக்கிறது. உங்களின் மதிப்பு உயரப்போகிறது. திடீர் அதிர்ஷ்டம் வேலை வாய்ப்புகள் தேடி வரும். மனதில் நேர்மறையான சிந்தனை தோன்றும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறும்.

கன்னி:

மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது திருமண வாழ்வில் பெரிய சிக்கலை சந்திப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களால் தொந்தரவு உண்டாகும். அண்ணன், தம்பி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நட்பு விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ஏழாவது வீடு வழியாக நகரும் பொழுது புதிய நட்புகள் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும் அலுவலகத்தில் உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். உங்கள் சொந்த வாழ்க்கை விவரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்:

பணியிடத்தில், அதிகரித்து வரும் அழுத்தம் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்களைத் தடுக்கலாம், அதே நேரத்தில் வணிகத்தில், கடுமையான போட்டி தடைகளை ஏற்படுத்தலாம். வாழ்க்கை துணையுடன் மோதல் உண்டாகும். பொறுமையுடனும் கவனமாகவும் செயல்படவேண்டிய காலக்கட்டம்.

தனுசு: 

தனுசு ராசிக்கு சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலருக்கு குடும்பத்தில் சிறு சிறு சவால்கள் தோன்றி மறையும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வதால் நன்மை உண்டாகும். இருப்பினும் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்:

சக ஊழியர்களுடனான பதட்டமான தொடர்புகளால் ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடலாம். நிறுவன வருவாய் சராசரியாக இருக்கலாம், ஆனால் போட்டி கூடுதல் தடைகளை ஏற்படுத்தக்கூடும். எலும்பு தொடர்பான பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்:

உங்கள் வாழ்க்கை அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதை நீங்கள் உணரலாம். பணியில் சிறந்து விளங்குவீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறப்பான பிணைப்பு உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சகோதரன் வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்கு சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மனதில் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். இந்த காலகட்டம் மிகவும் மோசமானது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாத தொடர்புகளால் உங்கள் திருமண வாழ்க்கை பாதிப்படையலாம். சேமிப்பதில் கவனம் செலுத்தவது நன்மை தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US